23-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நீதியைச் செயலாக்கும் தேவ ஆட்டுக்குட்டி!
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:6 )NKJV
தேவனின் ஆட்டுக்குட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்துவாகிய இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் நீக்குவதைக் கண்டோம் . (யோவான் 1:29)
ஆட்டுக்குட்டியாக கொல்லப்பட்ட இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததையும்,இப்போது பரலோகத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டியையும் பார்க்கிறோம். இவை இரண்டும் தீவிர முரண்பாடுகளாக இருக்கின்றன.
பூமியில் தேவனின் ஆட்டுக்குட்டியாக,அவர் சாந்தமாக இருந்தார். அவர் பலியிடுவதற்கு ஆட்டுக்குட்டியாகவும்,மயிர் கத்தரிப்பவருக்கு செம்மறி ஆடாகவும் கொண்டு செல்லப்பட்டார்,ஆனால் அவர் வாயைத் திறக்கவில்லை,மாறாக அவர் தேவனின் கோபத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டார்,ஏனென்றால் அவர் பாவம் செய்யாதவர் நமக்காக பாவமாக மாறினார்,அதனால் தான் அவர் தேவனிடம்,மனிதகுலதிற்காக உரிமையோடு பரிந்து பேசமுடிந்தது .
ஆனால் இப்போது,நம்மை தேவனிடம் சமரசம் செய்தபடியினால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார்,ஆகையால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதியையும், ஒடுக்குபவர்களுக்கு நியாயத்தீர்ப்பையும் நிறைவேற்றுவதற்கு பரலோகத்தின் உயர்ந்த சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ஆதிக்கம் செய்யும் ஆட்டுக்குட்டியானவராக இருக்கிறார்.
என் பிரியமான நண்பர்களே, இந்த வாரம், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் கழுவப்பட்ட நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்.சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியனவரால் நிறைவேற்றப்பட்ட தேவனுடைய நீதியை உங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அவர் 4 வது முத்திரை மற்றும் 5 வது முத்திரையைத் திறந்தபடியால் – எல்லா தீமைகளிலிருந்தும் (அது மரணத்திற்கு கூட வழிவகுத்திருக்கலாம்) பாதுகாப்பின் ஆசீர்வாதம் மற்றும் இயேசுவின் பெயரில் உங்களுக்கு நீதியையும்,பரிபூரண ஆசீர்வாதங்களையும் வழங்குகிறது!ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நீதியைச் செயலாக்கும் தேவ ஆட்டுக்குட்டி!
கிருபை நற்செய்தி தேவாலயம் .