24-01-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதாவை அறிவது, உங்கள் கதையை உருவாக்குகிறது!
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:யோவான்-2:9 NKJV.
ஒரு அதிசயம் நிகழ்ந்தது, ஆனால் அது எப்படி அல்லது எப்போது நடந்தது என்று அந்த மணமகனுக்குத் தெரியவில்லை.
பந்திவிசாரிப்புகாரணக்குக் கூட திராட்சை ரசம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.
விருந்தினர்களில் பலர் முதலில் பற்றாக்குறை இருப்பதை உணரவில்லை.
அதிசயத்தின் பின்னால் என்ன நடந்தது என்பதை சிலர் அறிந்திருந்தனர் (தண்ணீர் திராட்ச ரசமாக மாறியது)
ஆனால், அதை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது என்பது ஒருவருக்கு மட்டும் தெரிந்திருந்தது.
பிரியமானவர்களே, ஒரு அதிசயம் எவ்வாறு நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும், அந்த நேரம் வந்துவிட்டது என்பதை நீங்கள் உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது உங்கள் வாழ்க்கையில் இல்லாத குறையை நீங்கள் அறியாவிட்டாலும், உங்கள் அற்புதத்தைப் பெறுவதற்கான தருணம் இது.
நம்முடைய கர்த்தராகிய இயேசு இன்று உங்கள் மீது அவருடைய ஆசீர்வாதங்களைப் பொழிவதற்கு நேரம், இடம் மற்றும் இயற்கையான செயல்முறைகளைக் கடந்து செல்கிறார். அவர் உங்கள் துக்கத்தை சந்தோஷமாகவும், உங்கள் துயரத்தை நிரம்பி வழியும் மகிழ்ச்சியாகவும் மாற்றி இருக்கிறார். அவரில் மகிழுங்கள், ஏனென்றால் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தம் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது!நீங்கள் உங்கள் பரலோகத் பிதாவின் பார்வையில் குற்றமற்றவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவும் நிற்கிறீர்கள்!
இன்றே உங்கள் அற்புதத்தை இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கான நேரம் – தண்ணீரை திராட்சரசமாகவும் மாற்றுவது, சாதாரணமானதை அசாதாரணமாகவும் மாற்றுவது,குறையை நிறையாகவும் பிதாவின் அன்பு மாற்றும்! ஆமென்🙏
மகிமையின் பிதாவை அறிவது,உங்கள் கதையை உருவாக்குகிறது!
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!