Category: Tamil

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

02-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

18.அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து,அவர்களை நோக்கி:வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:18 NKJV.

ஆண்டவராகிய இயேசு நம்முடைய பாவங்களின் நிமித்தமாக நம் மரணத்தை நமக்காக ஏற்று மரித்தார் என்பது முற்றிலும் ஒரு அற்புதமான உண்மை மற்றும் அதோடு,இயேசு நம்மை என்றென்றும் நீதிமான்களாக்க சாவை ஜெயித்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்.அதனால்,இயேசுவுக்கு வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது,அதன் விளைவாக இந்த அதிகாரம் நமக்கும் ஆளுகை கொடுக்கப்பட்டிருக்கிறது.இது நல்ல செய்தி. இதுதான் நற்செய்தி!

என் பிரியமானவர்களே,இந்த மாதத்தை ஆரம்பிக்கும் போது,இயேசுவானவர் வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொண்டவர் என்ற எண்ணத்தை மனதில் கொண்டிருங்கள்,இதன் விளைவாக பாவம், நோய், பயம், அடக்குமுறை,எல்லாவற்றின் மீதும் நீங்கள் ஆளுகை செலுத்துவீர்கள்.உங்கள் மீது உச்சரிக்கப்பட்ட அனைத்து சாபங்களும் மற்றும் மரணத்தையும் ஆளுகை செய்யுங்கள். அல்லேலூயா! இது எல்லாவற்றிலும் மிக நல்ல செய்தி.

என் அன்பானவர்களே,இந்த மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நன்மைகள் உண்டாகும். உயிர்த்தெழுந்த மற்றும் சிம்மாசனத்தில் அமர்ந்திருககிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உங்கள் நீதியாயிருக்கிறார்,இதன் விளைவாக உங்களுக்கு எதிராக வாய்க்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது மற்றும் எதிர்க்கும் ஒவ்வொரு நாவும் கண்டிக்கப்படும். ஆமென் 🙏

என் பிரியமானவர்களே,நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்பதை அறிக்கையிடுங்கள்,மேலும் மகிமையின் ராஜாவைப் பற்றிய புதிய புரிதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்,உங்கள் மூலம் பூமியில் அவருடைய ஆளுகையை நடைபெறுவதாக.ஆமென்🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்*!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய தியாகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

28-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய தியாகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

41. அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
42. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்;ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்*.
43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி,அவரைப் பலப்படுத்தினான்.
44. அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்.அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. லூக்கா 22:41-44 NKJV.

வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி மேலே குறிப்பிட்ட ஜெபம் மிகவும் வைராக்கியமான ஜெபமாக பார்க்கப்படுகிறது.

இயேசுவின் இந்த ஜெபம் எல்லா ஜெபங்களிலும் தலையாய ஜெபமாகும்.இந்த ஜெபம் மனிதன் தேர்ந்தெடுத்த இலக்கை தேவன் மனிதனுக்காக திட்டமிட்ட இலக்காக மாற்றியது.அது ஒரு தெய்வீக பரிமாற்றம்!

இந்த ஜெபமானது மனிதகுலம் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க ஏறெடுக்கப்பட்டதால்*மிகவும் வியாகுல நிறைந்த இந்த ஜெபத்தைத் தடுக்க நரகத்திலுள்ள அனைத்து தீய சக்திகளும் எதிர்த்து நின்றது,ஆனால் அந்த ஜெபம் இறுதியில் வெற்றி பெற்றது (எபிரேயர் 5:7).அல்லேலூயா!நமக்காக தம்முடைய உயிரையும் கொடுக்க நம்மை மிகவும் நேசித்தவரால் நாம் வெற்றியாளர்களை விட மேன்மையாக மாறினோம்.

இயேசுவின் வியர்வை,தரையில் விழும் பெரும் இரத்தத் துளிகள் போல,அவருடைய உடலின் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் பெருக்கெடுத்துக் கசிந்து கொண்டிருந்த பட்சத்தில் பரிசுத்த வாரம் அதன் உச்சத்தை அடைந்தது.
இந்த வேதனையான ஜெபம் வியாழன் இரவு தொடங்கி மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்தது,அது மனிதகுலத்திற்கான தேவனின் இலக்கை மனிதனுக்கு என்றென்றும் முத்திரையிட்டது. நன்றி இயேசுவே!

இயேசு ஜெபத்தில் மிகுந்த வியாகுலத்தோடு தரித்திருந்ததால் நரகம் அனைத்தும் எதிர்த்தாலும்,மகிமையின் ராஜாவாகிய அவர் மரணத்தையும் நரகத்தையும் ஜெயித்து,அவை மீது என்றென்றும் வெற்றி பெற்றார். அல்லேலூயா.

என் அன்பானவர்களே,இந்த வெள்ளிக்கிழமை ஒரு புனித வெள்ளியாக கருதப்படுகிறது,எல்லா நாட்களிலும் இது சிறந்ததாக பார்க்கப்படுகிறது,ஏனென்றால் மாமனிதர் கிறிஸ்து இயேசுவின் தியாகத்தால் உங்களுக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நன்மை மட்டுமே நடக்கும்! அவருடைய நற்குணம் உங்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது.கிருபை உங்களைத் தேடி வரும். அவருடைய இரக்கத்திற்கு ஒருபோதும் முடிவில்லை. பழையவைகள் ஒழிந்துபோயின இதோ எல்லாமே புதிதாகிவிட்டன. ஆமென்🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய தியாகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நித்தியமான நீதியை அனுபவியுங்கள்!

27-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நித்தியமான நீதியை அனுபவியுங்கள்!

39. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.மத்தேயு 23:39 NKJV

மனித குலத்தின் மீதான தேவனின் நிபந்தனையற்ற அன்பு,அவரது இயல்பு,மற்றும் அவரது பிரமாணங்களின் தூய நோக்கம் ஆகியவற்றை பரிசுத்த வாரம் விவரிக்கிறது.

கர்த்தராகிய இயேசு மக்களுக்கு, நடக்கவிருக்கும் நிகழ்வுகளை பேரார்வத்துடன் போதித்தார்.அவர் மக்களை தயார்ப்படுத்துவதற்கு வேதவசனங்களைத் துல்லியமாகவும்,தெளிவாகவும் சரியானதாகவும் விளக்கினார்.

அதில் உண்மையான விசுவாசிகளை உலகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தயார்படுத்தினார, தேவனின் நீதியின் காரணமாக இவை அனைத்திலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர்களுக்கு உறுதியுமளித்தார்!

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் அப்பாவிகளை தவறாக வழிநடத்தும் தவறான போதனைகளால் அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான விளைவுகளை அவர் வேதனையோடும், கடுமையாகவும் எச்சரித்தார் (மத்தேயு – 23).
தேவனின் நித்திய நீதியை நிலைநாட்ட அவரது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லாத காரணத்தினால் அத்தி மரத்தையும் அவர் சபித்தார்.அவர் உண்மையிலேயே நீதியின் ராஜா! வஞ்சகர்கள் அவரை குற்றம்சாட்டவும் எந்த விதத்திலும் அவரை சவால் செய்யவும் முடியவில்லை. அவர் தேவனின் நீதியின் மீது பேரார்வம் கொண்டிருந்தார் மற்றும் அதில் சமரசம் செய்யமுடியாதபடி ஒப்பற்றவராக இருந்தார்.

என் அன்பானவர்களே,பரிசுத்த வாரத்தின் இந்த நாளில், உங்களையும் என்னையும் என்றென்றும் நீதிமான்களாக்கிய கிறிஸ்துவின் வைராக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்,அதனால்தான் அவருடைய வாழ்க்கையை தியாகம் செய்து நாம் என்றென்றும் நீதிமான்களாக இருப்பதை அவர் உறுதி செய்தார்! அல்லேலூயா! இதை மட்டும் நம்புங்கள்!

அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே,கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற எங்கள் ராஜாவே, நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்! ஆமென்🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நித்தியமான நீதியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் மீது அவர் வைத்துள்ள வைராக்கியத்தை அனுபவியுங்கள்!

26-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் மீது அவர் வைத்துள்ள வைராக்கியத்தை அனுபவியுங்கள்!

16.புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்;என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
17.அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
18.அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே,இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
19.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்;மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். யோவான் 2:16-19 NKJV.

எருசலேம் நகரில் ராஜாவின் வெற்றிகரமான நுழைவுடன் பரிசுத்த வாரம் தொடங்கியது.இந்த ஒரு வாரத்திற்குள்,மனிதகுலத்திற்கான தேவனின் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது.தேவன் இந்த உலக மக்களை அநாதி சிநேகத்தினால் நேசித்ததினால்,அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை அவர்களுக்காக தியாகமாகும்படி கொடுத்தார். அல்லேலூயா!

கிறிஸ்துவின் பேரார்வம் முதன்முதலில் தேவாலயத்தின் மீதான அவரது மிகுந்த அன்பில் வெளிப்படுத்தப்பட்டது. அவரது வைராக்கியம் அல்லது பேரார்வம் அவரை உட்கொண்டது,அதாவது தேவனின் வீட்டின் மீதான தீவிர அன்பு அவரது வீட்டின் மரியாதைக்காக வைராக்கியம் கொண்டது. இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம்.நம் உடல் தேவனின் ஆலயம்.தேவன் நம் உடலை வைராக்கியத்துடன் பாதுகாக்கிறார்.இதற்காகவே இயேசு தம் உயிரை நமக்காகக் கொடுத்தார்.

என் அன்பானவர்களே,உங்களை விட,தேவனுக்கு நீங்கள் முக்கியம்!உங்கள் இதயம் அவருடைய முதன்மையான அக்கறை.அவருடைய இதயம் உங்களுக்காக ஏங்குகிறது. ஏனென்றால் பொக்கிஷம் எங்கே உள்ளதோ அங்கே இதயம் இருக்கிறது என்று எழுதப்பட்டுள்ளது.நீங்களே அவருடைய பொக்கிஷம். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அப்படியே அவர் உங்களை நேசிக்கிறார். இரக்கமுள்ள தந்தை ஓடிவந்து தனது இழந்த மகனைக் கட்டிப்பிடித்த நிகழ்வு கெட்ட குமாரனின் உவமையால் அது மிகச்சரியாக விளக்கப்பட்டது. மகனின் இதயம் தந்தையிடம் திரும்பியதைத் தவிர வேரெந்த எதிர்பார்ப்பும் தந்தைக்கு மகனிடம் இல்லை.இன்றும், நமது தேவன் உங்களிடம் கேட்பது உங்கள் இதயம் மட்டுமே!

என் அன்பானவர்கள,நீங்கள் தேவனுக்குக் காட்டக்கூடிய மிகப்பெரிய மரியாதை,உங்கள் முழு இதயத்தோடும் (முழு இதயப் பக்தி),முழு ஆத்துமாவோடும் மற்றும் முழு உடலையும்(பூமியில் அவருடைய சித்தம் செய்ய)அவருக்கு அர்ப்பணிப்பதாகும். ஆமென்🙏.
.
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் மீது அவர் வைத்துள்ள வைராக்கியத்தை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

தாழ்மையான மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரின் இரட்சிப்பை அனுபவியுங்கள்!

25-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

தாழ்மையான மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரின் இரட்சிப்பை அனுபவியுங்கள்!

30. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
35. அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36. அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.லூக்கா 19:30, 35-36 NKJV

இந்த நிகழ்வு பொதுவாக குருத்தோலை ஞாயிறு பண்டிகை என்று அழைக்கப்படுகிறது! இது’எருசலேமுக்குள் ராஜாவின் வெற்றிகரமான நுழைவு’என்றும் அழைக்கப்படுகிறது.திரளான மக்கள் இயேசுவுக்கு முன்னும் பின்னும் சென்றனர்.அவர்கள் தங்கள் ஆடைகளை சாலையில் கிடத்தி,குருத்தோலைகளை ஏந்தி, ஹோசன்னா-எங்களை காப்பாற்றுங்கள் என்று ராஜாவுக்கு ஆர்ப்பரித்தனர்.

மேலும் அவர்கள் தங்கள் ஆடைகளை ஒரு கழுதைக்குட்டியின் மீது கிடத்தி,ராஜாவை அமரவைத்து,இதன் மூலம் சகரியா தீர்க்கதரிசனமாக கூறிய வார்த்தைகள் நிறைவேறியது.சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.சகரியா 9:9

தாழ்மையான ராஜா,குதிரையின் மீது அல்ல,கழுதையின் மீது அமர்ந்து தனது நீதியானஆட்சியை நடத்துகிறார்.அல்லேலூயா! இதை நம் கண்கள் காணட்டும்.

ஒருபோதும் சோதிக்கப்படாத,பயிற்சியளிக்கப்படாத கழுதைக்குட்டி இயேசுவைச் சுமக்கப் பயன்படுத்தப்பட்டது.
ஆம் என் பிரியமானவர்களே,நீங்கள் இயேசுவைச் சந்திக்கும் போது, நீங்கள் எப்படிப் பயிற்றுவிக்கப்படாதவர்களாகவும்,படிக்காதவர்களாகவும் தோன்றினாலும், கர்த்தர் உங்களைப் பொது மேடையில் பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார்.பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு,அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள(அப்போஸ்தலர் 4:13 ).அந்தப்படியே,இந்த வாரம் இயேசுவின் நாமத்தில் இதுவே உங்கள் பங்காகட்டும்!ஆமென்🙏. .

தாழ்மையான மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரின் இரட்சிப்பை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவர் வாக்குத்தங்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்!

22-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவர் வாக்குத்தங்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்!

35.ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
36.நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து,வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
37.வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார்,தாமதம்பண்ணார்.எபிரெயர் 10:35-37 NKJV.

தேவனின் சித்தத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும்,அதன் விளைவாக தேவனின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதின் முக்கியத்தையும் மேற்கண்ட வேத வசனங்களிலிருந்து ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
கர்த்தராகிய இயேசு ஏற்கனவே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிவிட்டு,எல்லாம் முடிந்துவிட்டதாகக் கூறிவிட்டு,உன்னதமான மாட்சிமையின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருப்பதால்,நாம் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதே நம் முன் உள்ள கேள்வி?

அவர் சிலுவை மரணத்தின் மூலமாக என் எல்லா பாவங்களையும் என்றென்றும் மன்னித்துவிட்டார்,ஏனென்றால்,“இனி அவர்களின் பாவங்களை நான் நினைவில் கொள்ளமாட்டேன்” என்று அவர் கூறினார்.அவர் தம்முடைய இரத்தத்தினாலே என்னை என்றென்றும் நீதிமானாக்கினார், ஆகையால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோமர் 5:1).அவர் என்னை என்றென்றும் ஆசீர்வதித்தார்,இயேசு உங்களுக்கும் எனக்கும் இந்த ஆசீர்வாதங்களை நிரந்தரமாக அருளினார்,அதை அவர் திரும்பப் பெறமாட்டார்.மேலும் உங்களையும் என்னையும் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் நீதிமான்களாகவும் நிலைநிறுத்தினார்!

இருப்பினும், நிலைப்பாட்டில் (POSITIONALLY ) உங்களுடையது நடைமுறையில் (PRACTICALLY) உங்களுடையதாகவும் மாற வேண்டும். பரலோகத்தில் உள்ள அனைத்து ஆசீர்வாதங்களுடனும் அவர் உங்களை ஆசீர்வதித்துள்ளார் (எபேசியர் 1:3) இப்போது பூலோகத்திலும் அது வெளிப்பட வேண்டும்.
பரிசுத்த ஆவியானவரே எல்லா ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்துபவர் (1 கொரிந்தியர் 12:7).
அவருடனான நமது ஒத்துழைப்பு (தனிப்பட்ட உறவு)மற்றும்,அவருடைய தெய்வீக வழியை நம் வாழ்வில் அனுமதிப்பது என்பது (வாழ்க்கையை அவரிடம் விட்டுக் கொடுப்பதே) தேவனின் சித்தம்.அவர் இயேசுவுக்கு உண்டான எல்லாவற்றிலிருந்தும் எடுத்து உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார் (யோவான் 16:14).அவர் தனது வார்த்தைகளை உங்கள் மனதிலும் இதயத்திலும் மீண்டும் எழுதுவார்.அவர் நம் சிந்தனையை ஆட்கொண்டவுடன்,தேவனுக்கு நன்றி சொல்வது தானாகவே நம்மிலிருந்து வரும்.

என் பிரியமானவர்களே,உங்களில் மற்றும் உங்கள் மூலமாக வேலை செய்ய அவரை அனுமதியுங்கள்.
இயேசுவின் அனைத்தையும் வெளிப்படுத்தும் பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ள கிறிஸ்துவாக இருக்கிறார்!அல்லேலூயா!ஆமென்🙏. .

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவர் வாக்குத்தங்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,நம்பிக்கையில் நிலைத்திருக்க உறுதி பெறுங்கள்!

21-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,நம்பிக்கையில் நிலைத்திருக்க உறுதி பெறுங்கள்!

22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
23. அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
24. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;எபிரெயர் 10:22-24 NKJV

ஒரு விசுவாசியின் எதிர்பார்ப்பு என்னவென்றால்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் வேலை முழுமையாக முடிந்தது என்று நம்புவதும், தான் நம்பிய இயேசுவில் தனது விசுவாசத்தை முழுமையாக வைப்பது ஆகும்.

ஒருவரின் நம்பிக்கையின் இந்த பயிற்சியானது மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
1. தேவனிடம் நெருங்கிச் செல்வது ( தேவனின் நீதி என்பது தேவனுடன் சரியான நிலைப்பாட்டின் அடிப்படையில் அவரது இரத்தத்தால் நிற்பதே இது நமக்கு இலவசப் பரிசாக வழங்கப்பட்டது.)

2. நம்முடைய விசுவாச அறிக்கையை உறுதியாகப் பிடித்துக் கொள்வது (நம்மில் கிறிஸ்து யாராக இருக்கிறார் என்பதன் அடிப்படையில்)
3. ஒருவரையொருவர் கருத்தில் கொண்டு, அன்பையும் நல்ல செயல்களையும் தூண்டுவதாகும்.

இப்போது, ​3ஆம் பகுதி மிகவும் சுவாரஸ்யமானது. கிளறுதல் – என்ற வார்த்தைக்கு தூண்டுதல் அல்லது கோபமூட்டுதல் என்று பொருள்.
பொதுவாக இந்த வார்த்தை ஒருவரை பொறாமை அல்லது கோபத்திற்கு தூண்டுவது போன்ற எதிர்மறை அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறாயினும்,அலைகள் எதிர்மாறாக இருக்கும்போது அல்லது பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது அல்லது ஒரு விசுவாசி தனியாக ஒரு புயலை எதிர்கொள்ளும் போது,தேவனுடைய விசுவாசிகளாகிய நாம் அப்படிப்பட்டவர்களை தெய்வீக கருணையோடும்,நிபந்தனையற்ற அன்போடும் தூண்டவேண்டும் மற்றும் நல்ல செயல்களைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக மக்கள் பொதுவாகப் பேசுவது போல் விரக்தி அல்லது அழிவின் வார்த்தைகளைப் பேசாமல் , மாறாக கிறிஸ்துவில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பேசவேண்டும்.நாம் நம்பிக்கையை பேசுவதோடு தேவைப்படுபவருக்கு சாத்தியமான எல்லா ஆதரவையும் வழங்கி ,இலவசமாக பெற்றதால் அதை இலவசமாக கொடுக்க அழைக்கப்படுகிறோம்.
மன்னிப்பு விஷயத்தில் கூட, நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்,ஏனென்றால் கிறிஸ்து முதலில் நம்மை மன்னித்தார்.(ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் -கொலோசெயர் 3 -13 ல் கூறப்படுகிறது )ஆமென் 🙏. .

கிறிஸ்துவின் நிபந்தனையற்ற அன்பை அனைவருக்கும்,குறிப்பாக தேவனின் வீட்டாருக்கும் வெளிப்படுத்த நம்மை அர்பணிக்க அழைக்கப்படுகிறோம் .

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,நம்பிக்கையில் நிலைத்திருக்க உறுதி பெறுங்கள்..

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து, உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் மகிமையை அனுபவியுங்கள்!

20-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து, உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் மகிமையை அனுபவியுங்கள்!

22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
23. அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
எபிரெயர் 10:22-23 NKJV

இயேசு தம்முடைய ஒரே தியாகத்தால் நம்மை என்றென்றும் பரிபூரணமாக்கியிருப்பதால்(எபிரேயர் 10:12),அவருடைய இரத்தத்தின் மூலம் தேவனிடம் நெருங்கி வருமாறு நாம் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால்,அவருடைய இரத்தம் நம்மை என்றென்றும் நீதிமான்களாக்கியுள்ளது.
ஆகையால், அவர் உண்மையுள்ளவர் என்பதால்,சந்தேகமில்லாமல் நம்முடைய விசுவாச அறிக்கையை உறுதியாகப் பற்றிக் கொள்வோம்.

நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டிய அறிக்கை என்னவென்றால்,கிறிஸ்து எனக்குள் இருப்பதால் நான் அவருடைய ஆலயமாய் இருக்கிறேன்.
இப்போது என்னில் உள்ள கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எனக்கு குணப்படுத்துதலின் வெளிப்பாடாயிருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எனக்கு தேவனை வெளிப்படுத்துகிறார்!
என்னில் கிறிஸ்து எனக்கு அவருடைய ஞானத்தை வெளிப்படுத்துகிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எனக்கு வெற்றி மற்றும் செழிப்புக்கான தெய்வீக யோசனையாய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எல்லா புரிதலையும் கடந்து செல்லும் அமைதியாய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து விவரிக்க முடியாத மகிழ்ச்சி மற்றும் மகிமை நிறைந்தவராய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எனது தெளிந்த புத்தியாய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து தேவனின் நிபந்தனையற்ற அன்பாய் இருக்கிறார்!அல்லேலூயா!.ஆமென் 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் மகிமையை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய புதிய மற்றும் ஜீவ வழியை அனுபவியுங்கள்!

19-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய புதிய மற்றும் ஜீவ வழியை அனுபவியுங்கள்!

19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
21. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிரெயர் 10:19-22 NKJV

இந்த “புதிய மற்றும் ஜீவ வழி” என்றால் என்ன?
பத்துக் கட்டளைகள் மோசேயால் கொடுக்கப்பட்டபோது,தேவன் சீனாய் மலையிலிருந்து பேசினார்,மேலும் மக்கள் அனைவரும் மிகவும் பயந்து தேவனிடம் நெருங்க வேண்டாம் என்று விரும்பினர்,ஏனென்றால் அவர்கள் தங்கள் பாவத்தினிமித்தமாக தேவனை நெருங்கினால் இறந்துவிடுவார்கள் என்று நினைத்தார்கள், மாறாக மோசே தேவனிடம் அவர்களுக்காக செல்ல வேண்டும் என்று விரும்பினர்.( உபாகமம் 5:1-27).
அவர்களின் இந்த பேச்சில் தேவன் மிகவும் வருத்தப்பட்டார்,ஏனென்றால் உண்மை என்னவென்றால், ‘நீங்கள் எவ்வளவு அதிகமாக தேவனிடம் கிட்டிச் சேருகிறீர்களோ,அவ்வளவு அதிகமாக வாழ்வடைவீர்கள்’ (உபாகமம் 5:29).

இயேசு தானே தியாகமாக மாறியதன் மூலம் இந்த அற்புதமான உண்மையை பூமியில் நிலைநாட்ட வந்தார். இந்த தியாகம் தேவனை என்றென்றும் திருப்திப்படுத்தியது.நித்திய ஆவியின் மூலம் தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம். (எபிரேயர் 9:14) அவருடைய தியாகம் நம்மை என்றென்றும் வாழ வைக்கிறது.

என் அன்பானவர்களே,தேவன் நீங்கள் இருக்கிற வண்ணமாகவே உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை ஒருபோதும் கடிந்து கொள்ள மாட்டார்,கைவிட மாட்டார்.
அவர் பாவத்தை வெறுக்கிறார்,ஆனால் அவர் பாவியை மிகவும் நேசிக்கிறார். பாவத்தின் தண்டனையை தம்மீது ஏற்றுக்கொள்வதன் மூலம் இயேசு இதை சாத்தியமாக்கினார்,இதனால் நீங்கள் இப்போது பயப்படாமல் அவருடைய இரத்தத்தால் தேவனை அணுகலாம்.உங்கள் எல்லா பிரச்சனைகளையும் அச்சங்களையும் அவரிடம் பகிர்ந்து கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது .
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு அதிகமாக தேவனிடம் வருகிறீர்களோ,அவ்வளவு அதிகமாக நீங்கள் வாழ்வடைவீர்கள்!
அவருடைய கிருபை ஒவ்வொரு காலையிலும் புதியது மற்றும் அவருடைய நீதி உங்களை வாழவும், வாழ்க்கையில் ஆளுகை செய்யவும் செய்கிறது.ஆமென் 🙏.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் தேவ நீதியாக இருக்கிறீர்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய புதிய மற்றும் ஜீவ வழியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய அற்புதமான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

18-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய அற்புதமான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
21. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.எபிரெயர் 10:19-22 NKJV

பிதாவினுடைய சித்தம் அவருடைய ஒரேபேறான குமாரனை நம்மைப் போலவே ஒரு மனிதனாக பூமிக்கு அனுப்புவதுதான்.அவர் பெயர் இயேசு! அவர் வந்து பூமியில் தேவனின் விருப்பத்தை நிறைவேற்றினார். அவர் நமக்காக பாவம் ஆனார்.அவர் நம்முடைய பாவத்திற்கான ஜீவாதார பலியாகவும் ஆனார்,அதன் விளைவாக அவர் இப்போது நம் ஆத்துமாக்களின் இரட்சகராகவும் பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார்.

இப்போது, ​இயேசுவின் இரத்தம் தேவனிடம் நம்மை நெருங்கி வரச்செய்கிறது.அவருடைய இரத்தம் நமக்காக இரக்கத்தை மன்றாடுகிறது.அவருடைய இரத்தம் நம்மை பாவத்திலிருந்து காப்பாற்றுகிறது மேலும் அவருடைய இரத்தம் தேவனின் மிகச் சிறந்ததை நமக்கு உரிமையாக்கித் தருகிறது.

இயேசுவின் இரத்தம் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது.எனவே, நீங்கள் தைரியமாக தேவனை அணுகி அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் வாக்குத்தங்களை நிறைவேற்ற மன்றாடலாம். உங்கள் ஆசீர்வாதத்தை தடுக்க எந்த தீய சக்தியும் இல்லை.இயேசுவின் இரத்தத்தினிமித்தம் தேவன் உங்களை ஆசீர்வதிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். இயேசுவின் நீதியின் நிமித்தம் உங்களை ஆசீர்வதிப்பதில் தேவன் மகிழ்ச்சியடைகிறார்.

என் பிரியமானவர்களே,தேவன் உங்களை என்றென்றும் நீதிமான்களாக ஆக்கியதால், அவருடைய கனத்தினாலும், மகிமையினாலும் நீங்கள் முடிசூட்டப்பட்டிருக்கிறீர்கள்.
உங்கள் உண்மையான அடையாளம் நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்று அல்ல, மாறாக உங்கள் உண்மையான அடையாளம் தேவன் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதுதான்.அவர் உங்களை என்றென்றும் நீதிமான்களாகக் காண்கிறார்!அவர் உங்களை மனமகிழ்ச்சியாடு பார்க்கிறார்! அவர் உங்களை நித்திய அன்புடன் நேசிக்கிறார்.

மேலே கூறப்பட்ட இந்த ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள், இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நிரம்பி வழியும் ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் காண்பீர்கள். ஆமென் 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய அற்புதமான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!