மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

26-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.யோவான் 21:7,11 NKJV

இங்கே நாம்,இருவர் ஒன்றாக ஒத்துப்போகும் போது “ஒப்பந்தத்தின் வல்லமையை” பார்க்கிறோம்!அது ஆச்சரியமாக இருக்கிறது!!

உயிர்த்தெழுந்த இயேசுவை(கிறிஸ்து இயேசுவை)பகுத்தறிந்து,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை வெளிப்படுத்த 2 சீஷர்கள் இணைந்ததை நாம் உணர்கிறோம்.மேலும் உயிர்த்தெழுந்த தேவன் நம் வாழ்வின் இருண்ட கட்டத்தில் நம்மை மீட்டெடுக்க ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறார் என்ற இந்த விலைமதிப்பற்ற வெளிப்பாடு நமக்கு கிருபையாக அளிக்கப்படுகிறது .உயிர்த்தெழுப்பப்பட்ட இரட்சகரை “பார்த்தபின்” நாம் மீண்டும் இருந்த வண்ணமாக இருப்பதில்லை!

மேலே உள்ள வேத வசனத்தை நீங்கள் கவனமாக கவனித்தால், பரிசுத்த ஆவியானவர் அன்பான அப்போஸ்தலன் யோவானுக்கு கர்த்தரை பகுத்தறியும் ஞானத்தை கொடுத்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள். மேலும், யோவான் “இது கர்த்தர்” என்று வெளிப்படுத்தினார், அப்பொழுது பேதுருவுக்கு, தேவனின் ஆவியானவர் அவருடைய வல்லமையை வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்தார், அவர் ஒரு மிகப்பெரிய மீன் அறுவடையின் வலையை தனி ஆளாக கரைக்கு இழுத்தார். கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களை இரண்டு இரண்டாக அதாவது ஜோடியாக இணைத்தார் என்பதை நினைவில் வையுங்கள் (லூக் 10:1).இப்படிப்பட்ட ஒரு ஜோடி பேதுருவும் யோவானும் அவர்கள், அப்போஸ்தலர் 3:1-8 இன்படி ,தாயின் வயிற்றில் இருந்து முடமாக பிறந்த மனிதனின் வாழ்க்கையில் தேவனின் அற்புதமான உயிர்த்தெழுதல் வல்லமையை வெளிப்படுத்தியதைக் காண்கிறோம்.

ஆம் என் அன்பானவர்களே, தேவன் தன்னையும் அவரது அசாத்திய வல்லமையையும் வெளிப்படுத்துவதற்காகத் தம்முடைய தீர்மானத்தின்படி ஜனத்தை ஜோடி ஜோடியாக இணைத்துள்ளார். திருமணம் ஆனவர்கள் மத்தியில்,கணவனையும் மனைவியையும்பெரிய காரியங்களை கர்த்தருக்காக செய்ய இணைத்துள்ளார். இன்னும் திருமணமாகாதவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களையும் ஜோடியாக இணைத்துள்ளார் பவுல் மற்றும் பர்னபாஸ் மேலும் பவுல் மற்றும் சீலாஸ் போல தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவ ராஜ்யத்தில் பெரிய காரியத்தை செய்ய ஒன்றுசேர்க்கப்படுபவர்கள்.ஆகவே, இருவர் உடன்படுவதில் மாபெரிய வல்லமை உண்டு!

இந்த தெய்வீகக் கூட்டாண்மையைப் பிடித்துக் கொண்டு இருப்பது குறிப்பாக கணவன்-மனைவி இடையே உடன்படுவது நமது பொறுப்பு,ஏனெனில் அவர்கள் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் நற்செய்தியின் இணை வாரிசுகள். இந்த புனிதமான உறவில் யாரையும் இடையிலோ அல்லது தலையிடவோ அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் ஆதி பெற்றோர்கள்,ஆதாம் மற்றும் ஏவாள் இடையே சர்பத்தை அனுமதித்ததின் விளைவாக ஏற்பட்ட குழப்பம் அதுவே மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு காரணம். முழு மனிதகுலமும் இந்த ஏமாற்றம் மற்றும் தந்திரமாக ஊடுருவியதின் விளைவாக இன்றுவரை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதனால் நம்மை மீண்டும் தேவனிடம் திருப்பவும் இழந்த மகிமையை மீண்டும் கொடுக்கவும் தம்முடைய குமாரனாகிய இயேசுவை ஜீவபலியாக அனுப்பிய தேவனுக்கு நன்றி. அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் உங்களை ஒன்றிணைத்து ஒருவருக்கு பகுத்தறிவையும் (DISCERNMENT) மற்றவருக்கு நிரூபணத்தையும் (DEMONSTRATION) கொடுக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.ஒன்றாக ஏற்று உடன்படுங்கள்! அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  20  =  26