16-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய கிருபையால் ஆளுகை செய்யுங்கள்!
20. மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. ரோமர் 5:16 NKJV
பாவம் மனிதனைக் கொன்றது, ஆனால் கிருபை மனிதனை மரணத்திலிருந்து எழுப்பியது.
பாவமானது சிறந்த பாவிகளாக திகழ்ந்தவர்களைக் கூட அழித்தது, அதேசமயம் கிருபையானது மிக மோசமான பாவிகளைக் கூட உயிர்ப்பித்தது.
ரோமர் 6:23 கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்,ஆனால் தேவனுடைய வரமோ நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் நித்திய ஜீவன்“. அதாவது பாவம் செய்யும் ஒவ்வொருவருக்கும் அதற்கான கூலி கொடுக்கப்படுகிறது. “கூலி” என்ற வார்த்தை தொழிலாளர்களுக்கு ஊதியம் என்று பொருள்படுகிறது. இருப்பினும், “பரிசு” என்ற வார்த்தை உழைக்காத அல்லது சம்பாதிக்க எதுவும் வழி செய்யாத ஒருவருக்கு பயன்படுத்தப்படுகிறது. அதை அவன் வெறுமனே நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்வதுதான்.
ஆம், என் அன்பானவர்களே! நீங்கள் உழைக்காமல் அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்று பிதா விரும்புகிறார்.அவருடைய அன்பானது இயேசு கிறிஸ்துவின் நபரில் வெளிப்படுகிறது.
அதேபோல், இயேசு கிறிஸ்து நீங்கள் உழைக்காமல் அல்லது சம்பாதிக்காமல் அவருடைய கிருபையைப் பெற விரும்புகிறார்.இயேசு நமக்காக உழைத்து,சாகும்வரை தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால், அவருடைய கிருபை உங்களுக்கும் எனக்கும் நிறைவை அளித்தது.அவருடைய கிருபை உங்கள் வாழ்க்கையில் தேவனின் பரிசு – அதாவது பரிசுத்த ஆவி என்னும் நபராக திகழ்கிறார்.
இன்று, உங்களில் உள்ள பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் நீதியால் ஆளும் அதிகாரமாக உ ள்ளார்.உங்களை வழிநடத்த அவரை அழைக்கவும், அவர் உங்களை வழிநடத்துவது போல் அவரைப் பின்பற்றவும்.அவர் உங்கள் இதயத்தில் வாழும் தேவனின் குரல்.நீங்கள் எப்போதும் ( 24*7)அவரிடம் உதவியை கேட்கலாம். நீங்கள் அவருக்கு செவிகொடுப்பதின் மூலம் இன்று ஆவியானவரின் கிருபை பொழிவானது உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்கிறது! ( கலா 3:2-5) ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய கிருபையால் ஆளுகை செய்யுங்கள்!
கிருபை நற்செய்தி பேராலயம்!