இயேசுவை நோக்கிப் பார்த்து தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

25-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.(யோவான் 4:10) NKJV‬‬

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் கடைசி வாரத்திற்கு வரும் வேளையில் , ​தேவன் உங்களுக்கு மிகச் சிறந்ததைத் தர விரும்புகிறார் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்! அவர் எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார் – தீய எண்ணங்கள் அல்ல, நன்மையான எண்ணங்கள்,வறுமை பற்றிய எண்ணங்கள் அல்ல மாறாக செழிப்பின் எண்ணங்கள்.
அவருடைய தொடர்ச்சியான நல்ல எண்ணங்களே மேலே குறிப்பிடப்பட்ட இந்த இதயம் உடைந்த சமாரியப் பெண்ணின் வாழ்க்கையில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைக் கொண்டுவந்தது.அந்த பெண்ணின் பின்னணி -அவளுக்கு 5 கணவர்கள் இருந்தார்கள்,அப்போது அவளுடன் வாழ்ந்தவர் கூட அவளது கணவர் அல்ல.

ஆனால்,அவளுடைய சமூக நிலையைப் பற்றி பேசுகையில்,அவளுடைய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தின் மீது அவளுக்கு வைராக்கியம் இருந்தபோதிலும்,அவளுடைய சுற்றுப்புறத்தில் அவளுக்கு நல்ல பெயர் இல்லை.தன் மூதாதையரான யாக்கோபு முற்காலத்தில் கட்டிய கிணற்றில் அவள் பெருமை கொண்டாள்.தற்செயலாக,அதே கிணற்றண்டையில் அவள் இயேசுவை சந்தித்தாள் ஆனால்,ஆண்டவர் அவளைச் சந்தித்தது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி மாபெரும் தாக்கத்தை அவளுக்கு ஏற்படுத்திய தெய்வீக சித்தத்தின் சந்திப்பாகும் .

தேவனால் அனுப்பப்பட்டவர் தன்னிடம் பேசுகிறார் என்பது அவளுக்குத் தெரியாது மற்றும் தன்னை நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தை அடையும் வரத்தை ஆண்டவர் அவளுக்கு கொடுக்க வந்திருக்கிறார் என்றும் தெரியவில்லை.ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு,அதனால் ஏற்பட்ட தவறான சிந்தனை முறையே அவளுக்கு தேவனின் மிகச் சிறந்ததைப் பெறுவதைத் தடுத்தது .வேதம் இதை தவறான அரண்கள்( DEMONIC STRONG HOLD) என்று அழைக்கிறது.

ஆம் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,நம் மனதில் கட்டுகிற தவறான அரண்களே தேவனின் மிகச் சிறந்ததைப் பெறுவதற்குத் தடையாக இருக்கலாம். இன்றைய தினம் உங்களுக்கான கிருபையானது உங்களைத் தேடி வந்து இப்படிப்பட்ட தவறான அரண்களை உடைக்கிறது,மேலும் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களும் இந்த கிருபை உங்களுக்கு உதவவும்,அது உங்கள் வாழ்க்கையில் தேவன் எதிர்பார்க்கும் மிக உயர்ந்த நிலைக்கு உங்களை உயர்த்தவும், தேவனின் மிகச் சிறந்த அன்பளிப்பை நன்றியுள்ள இதயத்தோடு பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது ! இது உங்கள் நாள்! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *