மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!

img_152

27-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!

1.ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2.கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.ரோமர் 8:1-2 NKJV

பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கை என்பது பூமியில் உள்ள வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் ஆளுகை செய்ய வைக்கும் வாழ்க்கை முறையாக விளங்குகிறது.

குற்றவுணர்வு என்பது மனித குலத்திற்கு தலையாய எதிரியாக இருக்கிறது.ஆனால், கிறிஸ்துவின் மரணமானது-உங்களுடைய குற்ற உணர்வை தூண்டக்கூடிய பாவத்தை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தின் விளைவான மரணத்தையும் அழித்த ஒரே மாற்று மருந்தாக இருக்கிறது.

சிலுவையில் இயேசு கிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் என்ன செய்தார் என்பதை நிஜமாக்கவே பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் வருகிறார்.

அனைத்து மனிதகுலத்திற்கும் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் என்னவென்றால் ,தேவன் இயேசுவின் உடலில் பாவத்தை நியாயந்தீர்த்தார் மற்றும் அதன் விளைவாக அனைத்து மனிதர்களுடைய பாவங்கள் நிவிர்த்தியாக்கப்பட்டு இயேசுவின் மூலம் விடுதலை பெற்றனர் என்று அறிவிப்பதாகும்.

இயேசுவின் தியாக மரணத்தை இப்போது விசுவாசிக்கும் அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் என்னவென்றால்,தேவன் பாவத்தை நியாயந்தீர்த்து, இந்த விசுவாசிகளை என்றென்றும் நீதிமான்களாக அறிவித்தார் என்று தெளிவுபடுத்துவதாகும்.
பரிசுத்த ஆவியின் ஊழியம், முழு மனித இனத்தின் வாழ்விலும் இந்த அழிவை ஏற்படுத்திய பிசாசின் மீது கடவுளின் நியாயதீர்ப்பை வெளிப்படுத்துவதாகும்.

கிறிஸ்துவுக்குள் என் அன்பானவர்களே, இன்று தேவனின் இறுதி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக உள்ளது.ஆகவே நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள், என்றென்றும் ஆளுகை செய்வீர்கள், அவருடைய இறுதி தீர்ப்பை மாற்றியமைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியிருக்கிறீர்கள்!
உங்களில் கிறிஸ்து” என்பது உங்களில் வசிக்கும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கையாகும்.. உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய ஆளுகையை அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *