23-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் இலக்கைக் கண்டறிந்து ஆட்சி செய்யுங்கள்!
1. அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.வெளிப்படுத்துதல் 5:1, 10 NKJV
தேவன் உங்களது இலக்கை மிக நுணுக்கமாக, எந்த வித சந்தேகமும், பிழையும் இல்லாமல், மிகத் துல்லியமாகத் தானே எழுதிக் கொடுத்துள்ளார்.
பரிசுத்த ஆவியானவர் தாவீது ராஜாவுக்கு இந்த பெரிய தெய்வீக இலக்கை வெளிப்படுத்தியபோது, அவர் ஆச்சரியமடைந்தார். அத்தகைய அறிவு எனக்கு மிகவும் அற்புதமானது; அது உயர்ந்தது,என்னால் அதை அடைய முடியாது என்று சங்கீதம் 139:6 இல் எழுதுகிறார். அல்லேலூயா!
ஆம் என் அன்பானவ்ர்களே,உங்கள் எதிர்காலம் உங்கள் உள்ளங்கையில் எழுதப்படவில்லை,அதை ஒரு ஜோசியரால் உங்களுக்குகு வெளிப்படுத்த முடியாது. மாறாக, உங்கள் இலக்கு மிகவும் அற்புதமானது மற்றும் மிகவும் மகிமை வாய்ந்தது, அது தேவனால் அவருடைய சுருளில் எழுதப்பட்டுள்ளது.அவர் மட்டுமே அதை அறிவார் மற்றும் வெளிபடுத்துவார்.
தாவீதுக்கு வெளிப்படுத்திய பரிசுத்த ஆவியானவர் இன்று உங்களுக்கும் வெளிப்படுத்துவார்,ஏனென்றால் தேவன் உங்களை நேசிக்கிறார் மற்றும் அவர் ஒரு பாரபட்சமற்ற தேவன்!
எப்படி, மேய்ப்பனாகிய சிறுவன் தாவீது இஸ்ரவேலின் ராஜாவானான்,தேவனின் இலக்கின் பற்றிய பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டின் படியே.அதே பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக தம் இலக்கை வெளிப்படுத்தி, உங்களை ஆசாரியர்களாகவும்,ராஜாக்களாகவும் ஆக்கியிருக்கிறார். இப்போது இந்த பூமியில் ஆட்சி செய்வீரகள்!
இந்த வாரம், உங்களுக்காக அவர் திட்டங்களை (உங்கள் இலக்கை) வெளிப்படுத்தும் வாரம்.அது உங்களை தலையாகவும், மேலானதாகவும் வைக்கும். இயேசுவின் நாமத்தில் உங்களை இலக்கின் பாதையில் நடத்தி ஒரு செழுமையான நிறைவேருதளுக்குக் கொண்டு வரும். (சங்கீதம் 66:12)!ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் இலக்கைக் கண்டறிந்து ஆட்சி செய்யுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!