மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,என்றென்றும் ஆட்சி செய்ய அவருடைய நீதியைப் பெறுங்கள்!

03-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,என்றென்றும் ஆட்சி செய்ய அவருடைய நீதியைப் பெறுங்கள்!

6.தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. சங்கீதம் 45:6 NKJV

தேவனின் சிம்மாசனம் மட்டுமே என்றென்றும் எப்போதும் உள்ளது,ஏனென்றால் அது நியாயம் மற்றும் நீதியின் அடித்தளத்ததில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.(“சத்தியமும், நீதியும் உமது சிம்மாசனத்தின் அஸ்திபாரம்” சங்கீதம் 89:14a).அல்லேலூயா!

எனவே,பிசாசின் முதன்மையான கவனம்,தேவனின் பிள்ளைகளை பாவம் செய்ய வைப்பதும், அதற்கு தேவன் எவ்வாறு பிரதிபலிக்கிறார் என்பதை காத்திருந்து பார்ப்பதும் ஆகும்.ஒருவேளை தேவன் பாவத்தை அசட்டை செய்தால்,அவருடைய நீதியின் தரத்தில் அது சமரசம் செய்வதாகும்.ஆனால் அது உண்மை அல்ல.
“தேவன் பரிசுத்தர்” மற்றும் “தேவன் அன்பே உருவானவர்” இவற்றின் இடையேயான மோதலை தீர்ப்பதற்க்காகவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். கல்வாரி சிலுவையில் தம் உயிரை விலையாக கொடுத்ததன் மூலம் அது முற்றிலும் தீர்க்கப்பட்டது.
பரிசுத்தமும்,நீதியுமான தேவன் இயேசுவின் சரீரத்தின் மீது உலகத்தின்பாவத்தை தண்டித்தார். (ஆம் முழு உலகத்தின் முழு பாவத்தையும் முழுமையாக தண்டிக்க தேவ ஆட்டுக்குட்டி பாவமாக மாறினார்) (ரோமர் 8:3). தேவன் எந்த பாவத்தையும் தண்டிக்காமல் விடவில்லை. இப்போது இதன் விளைவாக, அன்பான மற்றும் இரக்கமுள்ள பிதாவாகியதேவன் உங்கள் சீரற்ற நடத்தையை பார்க்கின்றபோதிலும் முடிவில்லாத அன்பினால் ( கிறிஸ்துவின் நிமித்தமாக) உங்களை நேசிக்க முடியும். ஆமென்! அல்லேலூயா!!

பாவத்தை பொறுத்தவரை பிதா,இயேசுவை (பாவியை அல்ல) தண்டித்தார்,அவருடைய ஆசீர்வாதங்களை பொறுத்தவரை,மாபெரிய பாவியும் கூட அவர் கிருபையை பெற முடியும்.இயேசுவின் நிமித்தம் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்கும் கிறிஸ்துவில் உள்ள தேவனின் நீதி இதுதான்.

ஆகையால், கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் தேவனின் நீதி என்று முழு மனதுடன் அறிவிக்கும்போது, தேவன் நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் இயேசுவின் உடலில் ஏற்கனவே தண்டிக்கப்பட்டதைக் காண்கிறார். மேலும் அவர் எந்த நிபந்தனையும் இல்லாமல் முழு மனதுடன் நம்மை ஆசீர்வதிக்கிறார், ஏனென்றால் மோசேயின் சட்டம் கோரிய அனைத்து நிபந்தனைகளையும் இயேசு தாமே நிறைவேற்றினார். ஆமென் 🙏

இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் தேவனின் நீதியானது, இன்று ஒவ்வொரு மனிதனை நிதானிக்க அவரது தரம்! இது நீதியின் செங்கோல், அவருடைய ராஜ்யத்தின் செங்கோல். ஆம்! பிதாவாகிய தேவனின் சிம்மாசனம் என்றென்றும் உள்ளது! ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவ நீதியாய் இருக்கிறீர்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியால் ஆளுகை செய்யுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *