30-01-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்க்கும் போது, அவருடைய சரியான வழி ,தேவ நீதியை அறிந்து கொள்வோம்.!
6. இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)
7. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.சங்கீதம் 24:6-7 NKJV
அவருடைய முகத்தைத் தேடுவது என்பதும் அவருடைய பிரசன்னத்தைத் தேடுவது என்பதும் அவருடைய நீதியைத் தேடுவது ஆகும்! நாம் அவருடைய நீதியைத் தேடும்போது, பூமியில் உள்ள வாழ்வைப் பற்றிய அனைத்தும் அதோடு கூட கொடுக்கப்படும் (மத்தேயு 6:33).அல்லேலூயா!
நீங்கள் அவருடைய நீதியைத் தேடும்போது, கனத்தால் உயர்த்தப்படுவீர்கள் (சங்கீதம் 122:9).
அப்படியானால் தேவனின் நீதி என்ன?
அவர் எது சரி என்று சொன்னாலும் அதுவே அவருடைய நீதி.
கெட்ட குமாரன் திரும்பி வந்ததைக் கொண்டாடுவதற்காக கொழுத்த கன்று கொல்லப்பட்டபோது, மூத்த மகன் கசப்புடன் இருந்தான்.அவனது தந்தையுடன் முற்றிலும் உடன்படவில்லை. ஆனால் தந்தை சொன்னது சரியே ,அதாவது கொழுத்த கன்றினைக் கொல்வது அவருடைய நீதியாய் இருந்தது . (லூக்கா 15:32).
தந்தையின் வீட்டில் சிறப்பாகச் செயல்படுபவரைக் கொண்டாட கொழுத்த கன்று,கொல்லப்பட வேண்டும் என்று மூத்தமகன்நினைத்தான். இருப்பினும்,தன் தவறை உணர்ந்து தன்னிடம் திரும்பும் பாவிக்காக கொழுத்த கன்று கொல்லப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார்.
தேவனுடைய நீதிக்கும் நம்முடைய சொந்த நீதிக்கும் இடையே என்ன வித்தியாசம்! அவருடைய நீதி இயேசு கிறிஸ்துவை மனிதகுலத்திற்காக ஜீவாதார பலியாக இலவச பரிசாக அருளப்பட்டது,அதேசமயம் நமது நீதியானது நமது நற்செயல்களாக நாம் நினைக்கும் நமது செயல்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும் .
யூத மக்களை முதன்மையாக மீட்க ஆண்டவராகிய இயேசுவை அவர்களிடம் அனுப்பினார்.ஆனால்,தேவனின் நீதியை அறியாமல் யூதர்கள், தங்கள் சொந்த நீதியை நிலைநாட்ட முயன்று, தேவனின் நீதிக்கு அடிபணியவில்லை.” ரோமர் 10:3
எனவே, இரட்சிப்பு நம் அனைவருக்கும் (புறஜாதிகளுக்கு ) அருளப்பட்டது!
நாம் வாழ்க்கையில் ஆளுகை செய்ய விரும்பினால், அவருடைய நீதியைத் தேட வேண்டும், நம்முடைய சுயநீதியை அல்ல.நாம் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறோம்!ஆமென்
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்க்கும் போது, அவருடைய சரியான வழி ,தேவ நீதியை அறிந்து கொள்வோம்.!
கிருபை நற்செய்தி தேவாலயம்.