30-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,நமது இலக்கை அடைய தேவனின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது!!
9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (வெளிப்படுத்துதல் 5:9-10) NKJV.
தேவனை அறிய புத்தகங்கள்,சமூக ஊடகங்கள்,மாதாந்திர இதழ்கள் போன்றவற்றின் மூலம் இருப்பினும் ,பரிசுத்த ஆவியானவர் மட்டுமே தேவனை சிறந்த முறையில் நமக்கு வெளிப்படுத்த முடியும்.மேலும் இயேசு கிறிஸ்து என்ற நபரின் மூலமும் தேவனை அறிய முடியும்.
பரிசுத்த ஆவியானவர் இயேசுவை நமக்கு வெளிப்படுத்துவது தான் இயேசுவை நோக்கிப் பார்ப்பது என்று அழைக்கப்படுகிறது. இயேசுவை அறிந்து கொள்ள நாம் முயற்சி செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவில் உள்ள தேவனின் பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார் அல்லது நம் மனக் கண்களை திறக்கிறார்- சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டி மட்டுமே ஒவ்வொரு ஜீவனின் இலக்கையும் (DESTINY யை )அறிந்திருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் தேவ ஆட்டுக்குட்டியை சிங்காசனத்தில் உங்களுக்கு வெளிப்படுத்தும்போது, இந்த பூமியில் ராஜாக்களாகவும்,ஆசாரியர்களாகவும் உங்களை மாற்றி உங்கள் இலக்கை (DESTINY யை ) நீங்கள் காணத் தொடங்குவீர்கள்.
ஆட்டுக்குட்டியானவரை ஆராதிப்பதின் மூலம் தேவன் நமக்கு வைத்திருக்கும் இலக்கை பார்பதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் உன்னதமாக அதை நடைமுறையில் யதார்த்தமாக்கவும் முடியும். நீங்கள் எவரை வழிபடுகிறீர்களோ அவருடைய சாயலாக மாற்றப்படுகிறீர்கள்.அதன் அடிப்படையில் தேவ ஆட்டுக்குட்டியை சிம்மாசனத்தில் வைத்து வழிபடுவது உங்களை அரியணையில் அமர்த்தும்.இது எல்லாருக்கும் பொருந்தும் சட்டம் ! (சங்கீதம் 106:19,20).
நாங்கள் (GRGC தேவாலயம்) நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)ஆராதனையில் கிட்டத்தட்ட 3 மணிநேர தொடர்ச்சியான துதி ஆராதனையை மேற்கொண்டோம் – சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிக்கு எங்கள் துதியின் காணிக்கைகளை அர்பணித்தோம்.சமூக ஊடகங்களில் ( YOUTUBE ல் ) எங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து,தேவ ஆட்டுக்குட்டியானவரை ஆராதிக்கும் வேளையில் உங்கள் கண்கள் திறக்கப்பட்டு உங்கள் வாழ்க்கையின் இலக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்த பூமியில் நிஜ வாழ்க்கையில் அதை அனுபவிப்பீர்கள் என்று தீர்க்க தரிசனமாக உரைக்கிறேன்! ஆமென் 🙏
ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,நமது இலக்கை அடைய தேவனின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது!!
கிருபை நற்செய்தி தேவாலயம் .