31-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!!
17. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.(வெளிப்படுத்துதல் 7:17) NKJV.
என் அன்பானவர்களே,இந்த மாத இறுதிக்கு வரும்வேளையில் நம் தேவ ஆட்டுக்குட்டியானவர் செய்த தியாகங்களை நினைப்பூட்ட விரும்புகிறேன்.மனித குலத்தைக் காப்பாற்ற மனிதனாக உருவெடுத்து,நம்மை செல்வந்தராக மாற்ற ஏழைக்கோலமாக அவதரித்தார்,அப்படியே நம்மை ஆசீர்வதிக்க அவர் சாபமாக மாறினார்,நம்முடைய பாவங்களுக்காக அவர் பாவமாக மாறி விலைமதிப்பற்ற ரத்தத்தைச் சிந்தி நம்மை நீதிமான்களாக மாற்றினார்.மனுகுலத்திற்காக மரணத்தை ருசித்து,அதை ஜெயித்து மரணத்தை என்றென்றும் ஒழித்ததினால் மனிதனை என்றென்றும் சாவாமை அடையச்செய்தார் மற்றும் நம்மை என்றென்றும் நீதிமான்களாக்கினார்.அல்லேலூயா!
அவர் நம்மை மேய்ப்பராக பாதுகாத்து வழி நடத்துகிறார்.நம் கண்களிலிருந்து ஒவ்வொரு கண்ணீரையும் துடைத்து ஜீவ தண்ணீரின் அஸ்திபாரங்களுக்கு நம்மை வழிநடத்துகிறார். மரணமோ,நோயோ,துக்கமோ,வலியோ நமக்கு இராமல் என்றென்றும் தம்முடன் நித்தியத்தில் வைத்திருக்கிறார். இயேசுவின் நிமித்தம் பிதாவாகிய தேவன் நமக்கு என்றென்றும் நம் நித்திய தந்தை ஆனார்.7 வது முத்திரையைத் திறப்பதன் மூலம் வெளிப்படுகிற விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை நமக்கு அளிக்கிறார்.ஆமென் 🙏
என் அன்பான நண்பர்களே,இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஆட்டுக்குட்டியானவரின் வெளிப்பாட்டின் பயணத்தின் மூலம் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.என்றென்றும் ஆட்சி செய்யும் சிம்மாசனத்தில் உள்ள ஆட்டுக்குட்டியை கிருபையுடன் நமக்கு வெளிப்படுத்திய பரிசுத்த ஆவியானவரை நான் வணங்குகிறேன்.
நம் நித்திய பிதாவை இயேசுவின் நாமத்தில் நெருக்கமாக அறிந்துகொள்ள நவம்பர் மாதத்தில் எங்கள் ஊழியத்துடன் இணைந்து ஆசீர்வாதம் பெறுங்கள்.ஆமென் 🙏
ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களைத் திறக்கிறது.!
கிருபை நற்செய்தி தேவாலயம்.