16-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!.
5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:5,6) NKJV
என் அன்பு நண்பர்களே, இந்த வாரம் தொடங்கும் போது, விவரிக்க முடியாத ஆசீர்வாதங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன என்பதை தீர்க்கதரிசனமாக உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
வேதத்தில் உங்களுக்குத் தெரிந்த எல்லா அதிகாரங்களிலிருந்தும் அவருடைய வாக்குறுதி வசனங்களை தீர்க்க தரிசனமாக அறிக்கை செய்ய முயற்சித்திருக்கலாம்.அல்லது நீங்கள் இரவும் பகலும் உங்கள் சக்தியை மீறி அயராது ஜெபித்திருக்கக் கூடும், உங்களிடமிருந்த கொஞ்ச பலத்துடன் பலமுறை உபவாசம் இருந்திருக்கலாம்.
உங்கள் வேதனையான பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் எல்லா வழிகளையும் முயற்சித்திருக்கலாம் – அது நிதி நெருக்கடிகள், நோய்கள், தீர்க்கப்படாத நீதிமன்ற வழக்குபிரச்சனை அல்லது உங்கள் குழந்தையின் எதிர்காலம் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மேலோங்கியிருக்கும் தேவனின் ஆட்டுக்குட்டியானவர்,பல ஆண்டுகளாக உங்களை நெருக்கிய இந்த பிரச்சினையை தீர்க்க தயாராக உள்ளார் .
பிதாவின் நீதியை நிறைவேற்றுவதை விவரிக்கும் சுருளை எடுக்க ஆட்டுக்குட்டியானவர் மட்டுமே தகுதியானவர் என்பதால் தம் கையில் எடுத்தார் – உங்கள் வாழ்க்கையைப் பற்றிய இறுதிக் கூற்றை கூற அவரே வல்லவராயிருக்கிறார்.அல்லேலூயா!
ஆகவே,தேவ ஆட்டுக்குட்டியைப் போற்றி வணங்குங்கள்! அவரே உங்கள் மூச்சு.அவர்தான் உங்கள் உயிர். அவர்தான் உங்கள் எதிர்காலம்.அவர் உங்களுடையவர்,நீங்கள் அவருடையவர்.அவருடைய இரத்தம் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது.
அவருடைய ஆசீர்வாதங்கள் நீதிமான்கள் மீது தங்கியிருக்கின்றன: உங்களுக்காக உயிரைக் கொடுத்த ஆட்டுக்குட்டியானவரின் காரணமாக விவரிக்க முடியாத ஆசீர்வாதங்கள் இன்று உங்கள் பங்கு! அல்லேலூயா!! ஆமென் 🙏 !
ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம் .