17-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!.
1. அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.(வெளிப்படுத்துதல் 5:1,7) NKJV.
இயேசு கிறிஸ்துவாகிய,தேவனின் ஆட்டுக்குட்டி மட்டுமே போற்றுவதற்கு தகுதியானவர் மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனின் கையிலிருந்து சுருளை எடுத்து அதன் முத்திரைகளைத் திறக்க பாத்திரராயிருந்தார்,ஏனென்றால் அவர் தனது இரத்தத்தால் அனைத்து பாவிகளையும் மீட்டவர்;
அதன் காரணமாக அவர் ஒருவரே வானத்திலும் பூமியிலும் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதியையும்,நியாயத்தையும் கொண்டு வர முடியும்;
மேலும்,அவருடைய இரத்தத்தின் காரணமாக, படைப்பாளருக்கும்,அவரது படைப்புக்கும் இடையேயும் அவரது படைப்புகளுக்கு மத்தியிலும் இணக்கத்தை ஏற்படுத்த அவரால் மட்டுமே முடியும்.
7 முத்திரைகளைத் திறப்பது தேவனுடைய படைப்பின் மீதுள்ள ஆசீர்வாதங்களைத் திறக்கும்.மேலும் ஒவ்வொரு மனிதனின் மிக உயர்ந்த நோக்கமான தேவ ஆசீர்வாதத்தையும் பெறுவதாகும்.அதாவது, மனிதனைக் குறித்த சித்தத்தையும்,நோக்கத்தையும் அறியக்கூடிய தேவனின் கிருபையைப் பெறுவார்கள். இது எந்த மனிதனும் இதுவரை கண்டிராத, கேட்டிராத,மனிதனின் இதயத்தில் தோன்றியிராததாயிருக்கும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது “மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட,விவரிக்க முடியாத ஆசீர்வாதம்”என்று அழைக்கப்படுகிறது.
ஆம் என் அன்பானவர்களே,தேவனின் சிறந்த ஆசீர்வாதம் இந்த நாள் உங்களுடையதாகும்.தேவனின் ஆட்டுக்குட்டியானவர் இந்த 7 முத்திரைகளைத் திறந்தார்,ஒவ்வொரு முறையும் அவர் அதைத் திறக்கும்போது, ஒரு தனித்துவமான ஆசீர்வாதம் வெளியிடப்படுகிறது. தேவனுடைய ஆட்டுக்குட்டியின் 7 மடங்கு ஆசீர்வாதமே என்றென்றும் உங்கள் பங்காகும். நான் இதை எழுதுகையில், கடவுளின் அற்புதமான பிரசன்னத்தை உணர்கிறேன், இந்த விசுவாசத்தில்,இந்த ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு வெளியிடுகிறேன்ஆமென் 🙏 !
ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம் .