29-05-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !
4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப்போஸ்தலர் 1:4, 8) NKJV
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து சீஷர்களுக்குள் தம் ஆவியை ஊதினார்.அன்று, கர்த்தராகிய இயேசுவின் விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
அவர் பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வந்த போது, அவர்களை “என்றென்றுமுள்ள ஆசீர்வதித்தினால் “ஆசீர்வதித்தார், அவர்களை பிதாவின் வாக்குறுதியான பரிசுத்த ஆவியானவருக்கு காத்திருக்கும்படி கட்டளையிட்டார் –
சபை உருவான ஆரம்பகாலத்தில் நடந்த இந்த நிகழ்வு பிற்காலத்தில் ,விசுவாசிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இவை இரண்டும் ஒரே அனுபவம் என்று சிலர் நினைத்தார்கள்.
என் அன்பானவர்களே , அந்த இரண்டும் ஒன்றல்ல. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் நாம் நம்பும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருகிறார் . இவரே நம்மில் உள்ள கிறிஸ்து. நாம் புதிய சிருஷ்டியாக மாறுகிறோம்! இந்த பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்குள் என்றென்றும் வசிப்பவர்.
இருப்பினும்,பிதாவின் வாக்குத்தத்தமாக ,விசுவாசிகள் மீது அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் ஒரு வித்தியாசமான அனுபவம் . விசுவாசிகள் மீது வந்த பரிசுத்த ஆவியானவர் இப்பொது அவர்கள் வாழ்க்கைக்கு தலைவராக இருக்கிறார் .
தண்ணீரைக் குடிப்பதும், தண்ணீரில் முற்றிலும் மூழ்குவதும் வேறு ,வேறான காரியம் . பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருவது நாம் தண்ணீரைக் குடிக்கின்ற அனுபவம் .நம்மீது உள்ள பரிசுத்த ஆவியானவர் நாம் தண்ணீரில் மூழ்கும், நம் வாழ்வின் தலைவராக செயல்படும் அனுபவமாக இருக்கிறர் . பரிசுத்த ஆவியானவர் நம்மிலும்,நம்மீதும் இருக்கின்ற இவை இரண்டையும் இயேசுவின் நாமத்தில் இன்றே அனுபவிப்போம்- ! ஆமென் 🙏
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்