03-07-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவைப் நோக்கிப் பார்ப்பது,கடவுளின் மகிமையைப் பெற்று நம்மை செழிக்கச் செய்கிறது !
7. அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான் . அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. (யோவான் 5:7-9) NKJV
என் அன்பானவர்களே,இந்த ஜூலை மாதம் உங்களை ஆசீர்வதிப்பதற்கும் உங்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்கும் கடவுளின் தனித்துவமான அமைப்பு முறையை வெளிப்படுத்துகிறது !
38 வருடங்களாக துக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த அந்த முடக்குவாதக்காரன், கடவுளின் அற்புதத் ஸ்பரிசத்தைக் காணாததால் மிகவும் விரக்தியடைந்து பெரும் ஏமாற்றமடைந்தான். அவன் குணமடைய தீவிரமாய் இருந்தான் ,ஆனால் ,மீண்டும் மீண்டும் தோல்விகளை எதிர்கொண்டாண்.ஒவ்வொரு முறையும் ஒரு தேவதூதன் தண்ணீரைக் கலக்கும் போது பெதஸ்தாவின் குளத்தில் இறங்க சுகமடைவதை மட்டும் அவன் மனதில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையாக இருந்தது.
உங்கள் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக மற்றொருவரின் மாதிரியை அல்லது அமைப்பு முறையை நீங்கள் கடைப்பிடிக்கவோ அல்லது பின்பற்றவோ உகந்ததல்ல .இன்னொருவருக்கு வேலை செய்யும் அமைப்பு முறை உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம்.
உங்களை ஆசீர்வதிப்பதற்காகவும், உங்களை செழிக்கசெய்யவும் தேவன் பரலோகத்தில் ஒரு தனிப்பட்ட வடிவத்தை அல்லது அமைப்பு முறையை வைத்திருக்கிறார். உங்களை ஆசீர்வதிக்க அல்லது உங்களை ஊக்குவிக்கும் கடவுளின் அமைப்பு முறையை நீங்கள் அறியாதபோது ஏமாற்றமும் விரக்தியும் ஏற்படும்.
பக்கவாதக்காரனின் விரக்தியானது பகுத்தறிவு இல்லாததை குறிக்கிறது .
பிதாவானவர் மகிமைப்படுவாராக.பெதஸ்தா குளத்தின் மாதிரியை,இரக்கத்தின் ஐசுவரியமுள்ள தன் சொந்த குமாரனாகிய இயேசுவை அனுப்பியதன் மூலம் அற்புதம் செய்தார . அவன் இயேசுவை ஏறெடுத்துப் பார்த்தபோது, இயேசுவின் மிகவும் இரக்கமுள்ள கண்கள் அவனுடைய முடங்கிப்போன நிலையைப் பார்த்தபோது பிதாவின் அற்புதமான வல்லமை வெளிப்பட்டு ,அவனை முழுமையாகவும் உடனடியாகவும் குணமாக்கியது.
இன்று, அதே இரக்கத்தின் இயேசு உங்கள் வாழ்க்கையைப் பார்த்து, உங்களை முழுமையாக்கி, நிரந்தரமாக ஆசீர்வதிக்கிறார். ஆமென்
இயேசுவைப் நோக்கிப் பார்ப்பது,கடவுளின் மகிமையைப் பெற்று நம்மை செழிக்கச் செய்கிறது !
கிருபை நற்செய்தி தேவாலயம்.