இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

nature

22-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

இப்போது உங்கள் எண்ணங்களின் மையம் எதில் நோக்கமாயிருக்கிறது? நீங்கள் தற்போது எதில் ஆர்வமாக உள்ளீர்கள்?
தேவனும் எதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன்? அவர் எப்பொழுதும் உங்களை நினைத்துக் கொண்டே இருக்கிறார். உங்களை நினைக்காமல் ஒரு நொடி கூட கடப்பதில்லை. உங்களைப் பற்றிய அவரது எண்ணங்கள் சமாதானத்திற்கானவை, தீயவை அல்ல. இது தான் நற்செய்தியாகிய சத்தியம் ! அல்லேலூயா!

“உங்கள் உடல் உங்கள் எண்ணங்களைப் பின்பற்றுகிறது” என்று சொல்வது போல், ஒவ்வொரு மனிதனைப் பற்றிய அவரது எண்ணங்கள் தான் அவரை இந்த உலகத்திற்கு அடியெடுத்து வைக்கச்செய்தது .அவர் மேலும் நமக்காக மரித்து நரகத்திற்குச் சென்று அங்கு இறந்தவர்களையும் நரகத்தில் கட்டுண்டர்வர்களையும் தம் மரணத்தால் விடுவித்தார் .
அவரில் எந்த பாவமும் இல்லை,ஆனால் அவர் நம்முடைய எல்லா பாவங்களை சுமந்து தீர்த்தத்தினால், பிசாசுக்கு நம் ஆத்துமாக்கள் மீது சட்டபூர்வமான உரிமை இல்லை.அவர் பெற்றுத்தந்த இந்த சுதந்திரம் இன்று காலை சத்தியமாக உங்களை விடுவிக்கிறது. அல்லேலூயா!

என் அன்பான நண்பர்களே, நீங்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனை எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும் அல்லது அற்பமானதாக இருந்தாலும், இயேசு உங்களை விடுவிக்கிறார்! அவர் பிரபஞ்சத்தின் மறுக்கமுடியாத ராஜா! அவர் இருளின் அனைத்து வல்லமைகளையும் ஆட்சி செய்கிறார்.அவர் ராஜாக்களின் ராஜா மற்றும் பிரபுக்களின் தேவன்!அவரே அண்ட சராசரங்களையும் ஆட்சி செய்கிறார்! ஆமென் 🙏

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று உரைக்கிறார். (எரேமியா 33:3)

அவருடைய இரத்தத்தால்,உங்கள் நீதியான இயேசுவை நீங்கள் நேரடியாக அணுகலாம்! அவருடைய நீதி உங்களை விடுவித்து,உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட எண்ணிலடங்கா ஆசீர்வாதங்களுடன் உங்களை ஆசீர்வதிக்கும். இதுவே நற்செய்தி,இதுவே சத்தியம் ! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *