19-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பாருங்கள்,முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுங்கள்!
13.அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14.உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15.தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, லூக்கா 2:13-15 NKJV.
தேவதூதர்கள் இயேசுவின் பிறப்புக்காக காத்திருந்தனர்,ஏனென்றால் மரியாள் கருவுற்ற காலத்திலிருந்தே தேவனின் பேரொளி கர்த்தராகிய இயேசு மீது இருந்தது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
அவர்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்து,வயல்களில் தங்கள் மந்தைகளைப் காத்துக் கொண்டிருந்த சில மேய்ப்பர்கள் முன் திடீரென்று தோன்றினர்.
அந்த மேய்ப்பர்கள் அகில உலகின் மிகப்பெரிய நற்செய்தியைக் கேட்டபோது, மனுக்குலத்தை ஆசீர்வதிக்க மாட்டுத் தொழுவத்தில் வந்து பிறந்த இறைவனைத் தேடி வந்தனர்.ஆண்டவராகிய இயேசுவை வணங்குவதற்கு வழிகாட்டிய வால் நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து கிழக்கிலிருந்து வந்த ஞானிகளும்கூட தங்கள் விலைமதிப்பற்ற பரிசுகளோடு அவரைப் பணிந்தனர்.
என் அன்பான நண்பர்களே,கிறிஸ்துவில் இருக்கும் தேவனின் அருளை நீங்கள்பெற்றால், மனிதர்களும் ,மாமன்னர்களும்,தேவர்களும் கூட உங்களைப் பற்றி அறிந்து உங்களைத் தேடி உங்களை ஆசீர்வதிக்க வருவார்கள்.அல்லேலூயா!
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் இதயத்தைத் திறந்து, இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதுதான். நீங்கள் கடவுளுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு உங்கள் இதயம் மட்டுமே .அவரிடம் நீங்கள் கூறவேண்டியதெல்லாம்,”என்னுடையது அனைத்தும் உம்முடையது, என் ஆத்தும மீட்பரே”.
நீங்கள் அவரிடம் அர்ப்பணிக்கும்போது, தேவனின் ஒளி உங்கள் மீது தங்கும்,மேலும் தேவனின் சிறந்த மற்றும் முன்னோடியில்லாத இணையற்ற,கற்பனை செய்ய முடியாத மற்றும் மகிமை நிறைந்த தயவால் அலங்கரிக்கப்படுவீர்கள்!
இந்த வாரத்தில் உங்கள் மீது தீர்க்கதரிசனமாக பேசப்படும் கிறிஸ்துமஸின் இரண்டாவது ஆசீர்வாதம் இதுவே !ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பாருங்கள்,முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம்.
