15-06-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதமான ஒளியை அணிந்துகொள்ளுங்கள் !
அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.(யாத்திராகமம். 32:4).
19. அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.
20. தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.(சங்கீதம் 106:19-20 )
நான் இயேசுவை என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட ஆரம்ப நாட்களில், சிலைகளை வணங்குவதை தேவன் ஏன் வெறுத்தார் என்று நான் பலமுறை யோசித்தேன்.அவர் விக்கிரக ஆராதனைக்கு எரிச்சல் கொண்டதேவன் என்றும் சிலைகளை வணங்குவதை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்றும் பத்து கட்டளைகள் குறிப்பிடுகின்றன.
ஆனால்,பரிசுத்த ஆவியானவர் மேலே உள்ள வசனங்களுக்கு என்னை வழிநடத்திய நாளில் அதை விளக்கியபோது, கடவுள் நம் மீது வைராக்கியம் கொண்டு நம்மை தம் பொக்கிஷமாக கொண்டிருக்கிறார் என்பதைக் கவனித்ததில் நான் அதிர்ச்சியடைந்தேன்,ஏனென்றால் அவருடைய சொந்த குழந்தைகள் மிகவும் மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற உயிரை ,ஒன்றுக்கும் உதவாத காரியத்தோடு பரிமாற்றம் செய்வதை அவரால் பார்க்க முடியாது..
என் குழந்தை ஒரு விலையுயர்ந்த வைர மோதிரத்தை எடுத்துக்கொண்டு அதையே ஒரு பிஸ்கட்டுக்கு பரிமாற்றம் செய்தால் நான் எப்படி உணருவேன் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
ஆம் என் அன்பானவர்களே, நம் கடவுள் நம்மீது உரிமை மற்றும் யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் வைராக்கியம் கொள்கிறார் ! இதுவே நம்மை தேவனுடைய ராஜ்யத்தில் மிகவும் விரும்பக்கூடியவர்களாக,முக்கியமானவர்களாக தோற்றுவிக்கும் மற்றும் நம்மை பெருமைப்பட வைக்கும் .. நம்முடைய தேவன் சேரக்கூடாத ஒளியில் வாசமாயிருக்கிறார், அங்கே ஒருவரும் அவரைப் பார்த்ததில்லை. நாம் அவரை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிக்கும்போது, அவருடைய மகிமையின் ஒளி நம்மை அணிவிக்கிறது,இருள் தானாகவே நம்மைவிட்டு ஓடிவிடும். ! ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதமான ஒளியை அணிந்துகொள்ளுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம்