02-08-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவை நோக்கிப் பார்க்கும் போது,அவருடைய பரிபூரண ஆசிர்வாதத்தை அனுபவிப்போம் !
10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
11. நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் . (யோவான் 10:10-11) NKJV.
கிறிஸ்துவுக்குள் என் அன்பானவர்களே,இந்த மாதத்தை நாம் தொடங்கும்போது, அவருடைய கிருபையின் மூலம், அவருடைய கிருபையின் மூலம் மாத்திரமே பயணிக்கும்போது, நல்ல மேய்ப்பரின் மிகுதியை அதாவது பரிபூரண ஆசீர்வாதத்தை நம் வாழ்வில் அனுபவிப்போம் .
இயேசு கிறிஸ்து மட்டுமே உண்மையான மேய்ப்பராக இருக்கிறார், ஏனென்றால் அவர் உங்களுக்காக தம்முடைய உயிரைக் கொடுத்தார், அதனால் நீங்கள் எந்த நன்மையிலும் குறைவுபடக்கூடாது, மாறாக நீங்கள் நித்திய வாழ்க்கைப் பெறவும் மற்றும் பூமியில் இந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் மிகுதியாக,பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதே அவர் நோக்கமாயிருந்தது .
நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்காக, கடவுள் தம்முடைய ஒரே மகனை ஜீவ பலியாக கொடுத்தார்.அதனால்,நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனைக் கொடுத்த்து உயிரோடெழும்பியதின் நிமித்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையாகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குள் ஊதியதின் மூலம் புதிய சிருஷ்டியாயிருக்கிறோம்.
பரிசுத்த ஆவியானவர் என்றென்றும் உங்களில் வாழ்கிறார், இந்த வாழ்க்கையை நீங்கள் எல்லா அம்சங்களிலும் ஏராளமாக அனுபவிக்க வேண்டும் என்று ஆவியானவர் உதவுகிறார். இப்போது நீங்கள் ஒரு வெற்றியாளரை விட மேன்மையாக இருக்கிறீர்கள், பூமியின் அனைத்து விவகாரங்களையும் கிறிஸ்துவுடன் கூட ஆட்சி செய்கிறீர்கள் !!!ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்க்கும் போது,அவருடைய பரிபூரண ஆசிர்வாதத்தை அனுபவிப்போம் !
கிருபை நற்செய்தி தேவாலயம்