05-06-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!
17. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, (II பேதுரு 1:17) NKJV.
மனிதன் தேவதூதர்களை விட சற்று தாழ்ந்தவனாக படைக்கப்பட்டான், ஆனால் கனம் மற்றும் மகிமையால் முடிசூட்டப்பட்டான் (சங்கீதம் 8:5). பின்னர் ,முழுமனித குலமும் பாவம் செய்து, கடவுளின் மகிமையை இழந்தனர்.
கடவுளின் மகிமையானது, கடவுளின் மேன்மை மற்றும் அவரது பிரகாசத்தைப் பற்றி பேசுகிறது. அதுதான் வீழ்ச்சிக்கு முன் மனிதனுக்கு இருந்தது.
இயேசு இந்த மனிதன் இழந்த மகிமையையும், கனத்தையும் பிதாவாகிய தலைசிறந்த மகிமையிலிருந்து பெற்றார் – . உங்களுக்காகவும் எனக்காகவும் அவர் இவற்றைப் பெற்றார்.ஏனென்றால், இயேசு ஒருபோதும் பாவம் செய்யவில்லை, அதனால் மகிமையை இழக்கவில்லை. ஆனால், அவர் வீழ்ந்த மனிதனின் இடத்தைப் பிடித்து, அதற்கு ஈடாகத் தம்முடைய மகிமையையும்,கனத்தையும் தெய்வீக பரிமாற்றமாக நமக்குக் கொடுத்தார். அல்லேலூயா!
என் அன்பானவர்களே, இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் அவருடைய மகிமையையும்,கனத்தையும் ,நீங்கள் காண்பீர்கள் -உங்கள் பணியிடத்தில், உங்கள் வேலையில், உங்கள் கல்வியில், உங்கள் வணிகத்தில், உங்கள் ஆரோக்கியத்தில், உங்கள் குடும்பத்தில், உங்கள் ஊழியத்தில், உங்கள் நிதி மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் காண்பீர்கள். இன்று, நீங்கள் இயேசுவைப் பார்க்கும்போது அவருடைய மகிமை உங்களை மாற்றும்! . ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!
.
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்