14-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!
14. அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். லூக்கா 17:14-16 NKJV
அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் காலத்தில், கர்த்தராகிய இயேசு ஒருமுறை 10 தொழுநோயாளிகளை குணப்படுத்தினார்.அந்த நாட்களில் தொழுநோய்,கோவிட் போன்ற மிகவும் பயங்கரமான நோயாக இருந்தது. அது தொற்றுநோயாக இருந்தது மற்றும் கிட்டத்தட்ட எந்த சிகிச்சையும் இல்லை.எவரும் தங்கள் சுகத்தைப் பெற்றதில்லை.
பத்து தொழுநோயாளிகள் கர்த்தராகிய இயேசுவிடம் அவருடைய இரக்கத்திற்காக மன்றாடினார்கள், கர்த்தர் பத்து பேரையும் குணமாக்கினார்,ஆனால் ஒருவர் மட்டுமே தேவனுக்கு நன்றி சொல்லவும் மகிமைப்படுத்தவும் திரும்பினார்.
தேவனின் வல்லமையின் மதிப்பு ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவர் தனது பிரச்சனையின் தீவிரத்தை அறிந்திருந்தார், மேலும் அந்த மாபெரும் பிரச்சனையை கர்த்தர் மட்டுமே தீர்க்கமுடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
என் அன்பானவர்களே, உங்கள் பிரச்சனை பாரதூரமானதாகவும் தீர்க்க முடியாததாக இருந்தாலும்,தேவனால் அதை தீர்க்க முடியும். தேவனுக்கு நீங்கள் ஏறெடுக்கும் நன்றியின் வெளிப்பாடு, உங்கள் தேவைக்கான தீவீரத்தின் அளவை வெளிப்படுத்துகிறது.
அந்த தொழுநோயாளி இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தி,தேவனை மகிமைப்படுத்தினார்.அவர் குணமடைந்த பிறகு அவரது நன்றியின் அழுகை,குணமடைவதற்கு முன் அவரது அவநம்பிக்கையான அழுகையை விட சத்தமாக இருந்தது. அவர் உண்மையிலேயே தேவனின் வல்லமையை ப் புரிந்துகொண்டார் – அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! நன்றியுணர்வு என்பது நம் உதடுகளில் அல்ல மாறாக நம் இதயத்தின் ஆழத்திலிருந்து நம் முழு ஜீவனையும் உள்ளடக்கியதாகும் .
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் அவநம்பிக்கையுடன் இருக்கும் பகுதிகளில் அவருடைய அற்புதமான வல்லமையை அனுபவிப்பீர்கள் என்று இந்த நாளில் நான் தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன். அவருடைய ஒப்பற்ற நற்குணம் உங்களைத் தாழ்த்தி,சர்வவல்லமையுள்ள இயேசுவின் நாமத்தில் நன்றியுணர்வுடன் உங்களை நிரப்பும்! ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம் .