இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

nature

15-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

22. இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
23. இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
24. உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்(மாற்கு 9:22-24) NKJV.

மேற்கண்ட வேத பகுதி எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் மிகவும் ஆறுதல் அளிக்கும் பகுதி.காதுகேளாத மற்றும் ஊமையாய் இருந்த ஒரு மகனின் தந்தையைப்பற்றிப் பேசப்படுகிறது .அவர் மகனுக்கு பேசவோ கேட்கவோ முடியவில்லை காரணம் அவன் ஒரு அசுத்த ஆவியால் பாதிக்கப்பட்டிருந்தான். அது அவர் மகனை கொல்லும் நோக்கத்துடன் பலமுறை நெருப்பில் தள்ளியது .
அவர் தனது மகனின் வாழ்க்கையில் விடுதலையைக் காண எல்லா வழிகளையும் முயற்சித்தார், ஆனால் பயனில்லாததால் அந்த மகனின் தந்தை மிகவும் அவநம்பிக்கையுடன் மற்றும் நம்பிக்கையை இழந்த நிலையில் காணப்பட்டார். கடைசியாக, அவர் தனது மகனை சர்வவல்லமையுள்ள இயேசுவிடம் கொண்டு வந்தார்.அல்லேலூயா!

தன் மகனுக்கு இதுவரை எந்தப் பரிகாரத்தையும் பார்க்க முடியாததால்,விசுவாசத்தை இழந்தது மாத்திரமல்ல,மேலும் தேவனால் குணப்படுத்த முடியுமா என்ற தீவிர சந்தேகமும் கூட இருந்தது. ,”உம்மால் கூடுமானால் செய்யும் “என்று தகப்பன் சொல்லிய கூற்றிற்கு இது தான் காரணம்.

கர்த்தராகிய இயேசு அவருக்கு “*உங்கள் மகனைக் குணப்படுத்த எனக்கு (இயேசு) விசுவாசம் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால்,எல்லாம் கூடும்*”என்று பதிலளித்தார் .

அவர் (தந்தை), விரக்தியடைந்து, தனது மகன் குணமடைவதைக் காணும் ஏக்கத்தில் கிட்டத்தட்ட நம்பிக்கையற்றவராக இருந்ததால், தாம் எப்படியாவது இயேசுவின் விசுவாசத்தில் இணைத்து விடுதலையைக் கொண்டுவர முடியும் என்று உறுதியாயிருந்தார்.,எனவே அவர் தனது மகன் சுகமடையும் முன்பு அவருடைய விசுவாசக் குறைபாட்டை முதலில் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கதறுகிறார்.

எல்லா மனிதரையும் காப்பாற்றவும்,விடுவிக்கவும்,குணப்படுத்தவும்,வல்லவரான இயேசுவால் தந்தை மற்றும் மகன் இருவரும் உடனடியாக குணமடைந்தனர்.

ஆம் என் பிரியமானவர்களே, உங்களுக்கு போதிய விசுவாசம் இல்லாவிட்டாலும்,அற்புதங்கள் செய்ய தேவையான அனைத்து விசுவாசமும் இயேசுவிடம் உள்ளது.அவருடைய விசுவாசத்தில் இணைந்து உங்கள் அற்புதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்,உங்கள் தேவைகளை வழங்குவதற்கு அவருடைய அற்புதங்களைச் செய்யும் திறனைப் பற்றிக் கொள்ளுங்கள்*. அல்லேலூயா! அவர் இரக்கமும்,அன்பும், பொறுமையும், கருணையும் உள்ளவர்,உங்கள் விசுவாசமின்மையை தம் விசுவாசத்தால் குணப்படுத்துகிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *