18-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்த்து ,நாம் இழந்ததை அவர் மீட்டுக்கொடுப்பதை அனுபவியுங்கள்!
18. மரித்தேன்,ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)K J V.
என் அன்பானவர்களே, மேற்கூறிய கடவுளின் குரலை இன்று உங்களுக்காக நான் விளக்க வேண்டுமானால், அது பின்வருமாறு இருக்கும் ,
“நான் நித்திய தேவனாயிருந்தாலும் ,மனிதகுலத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மனிதனாக பிறந்து ,மனிதனுக்காக ஜீவனை அளித்து மரித்தேன்,ஆனால் இப்போது நான் சதாகாலமும் வாழ்கிறேன்.மேலும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நரகத்தையும் மரணத்தையும் நான் வென்றுவிட்டேன்.ஜீவன் மற்றும் இறப்பு என்ற தீய சுழற்சியில் இருந்து நான் மனிதகுலத்தை முற்றிலும் விடுவித்தேன்.இப்போது, நான் நித்தியமாய் வாழ்வது போல் நீங்களும் நித்தியத்தில் வாழ்கிறீர்கள் .ஆமென்!”
மனிதன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன், அவனுக்கு ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு- பிறப்பதற்கு ஒரு நேரம்,இறப்பதற்கு ஒரு நேரம் என்று பிரசங்கி புத்தகம் மனிதனின் விரக்தியை அழகாக வரையறுக்கிறது, ஏனெனில் அவன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன்.
மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் இல்லாத வரை விரக்தி நிலைத்திருக்கும். இதற்குக் காரணம், மனிதன் தன் வரையறுக்கப்பட்ட அறிவின்படி தன்னை புரிந்து கொண்டு தெய்வீகத்தின் தேவையைப் பார்க்கவில்லை ,மாறாக தன்னிடம் திறமையும்,ஞானமும் இருப்பதாக அவன் திருப்தி அடைகிறான்,எனவே அவ தன்னைத்தானே மெச்சிக்கொண்டுஞானமும், திறமையும் கடவுளிடமிருந்து வருகிறது என்பதை அறியாத்திருக்கிறான்.
அவன் குழப்பமான,தீர்க்க முடியாத பிரச்னையை சந்திக்கும்போது, தனக்கு மேலான ஒரு சிருஷ்டிகர் இருப்பதை அவன் உணர்கிறான். அவன் தனது காலத்தின் தொடக்கத்தில் இதை உணர்ந்திருந்தால், அவன் தனது வாழ்க்கையின் பல விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம். அதை அவன் உணரும் போது, தாமதமாகிவிட்டது.ஆனால், நித்திய தேவன் காலக்கட்டத்தில் நுழைந்து, இது மிகவும் தாமதமாகவில்லை என் தாசனே ,இதோ நான் எல்லாவற்றையும் புதிதாக செய்கிறேன் என்று கூறுகிறார்! அல்லேலூயா!
ஆம் என் பிரியமானவர்களே, எல்லாவற்றையும் புதிதாக்கவும், இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கவுமே இயேசு வந்தார்.அவர் என்றென்றும் வாழ்கின்றதால் ,இந்த வாரம் உங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அவருடைய அற்புதமான மறுசீரமைப்பின் வல்லமையை வெளிப்படுத்துகிறார்.ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்த்து ,நாம் இழந்ததை அவர் மீட்டுக்கொடுப்பதை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம் .