19-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!
18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)
இயேசுவே தேவன் ! அவர் சதாகாலமும் வாழ்பவர்.அவரில் ஜீவன் இருக்கிறது (யோவான் 1:3). அவரே ஜீவன் (யோவான் 14:6).
மனிதர்களால் புரிந்துகொள்ள கடினமான காரணம் என்னவெனில், சதாகாலமும் வாழ்பவர்,அவரில் ஜீவன்
இருக்கிறது ,அவரே ஜீவனாகவும் இருகிறார்,அப்படி இருக்க அவர் எப்படி இறக்க முடியும்?
கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஒளி அளிக்கும் சூரியன் இருளாக மாற முடியுமா? அல்லது இருளால் ஒளியை விழுங்க முடியுமா? மாறாக, இருள் என்பது ஒளி இல்லாததை குறிக்கின்றது.அதுபோலவே, மரணம் என்பது வாழ்வின்மயை குறிக்கின்றது.
என் பிரியமானவர்களே,மனித குலத்தின் மேலான நன்மைக்காக எதுவாக இருந்தாலும் தேவன் அதை செய்ய முடியும். ஆகவே மரிக்க முடியாதவர் மனித குலத்திற்காக மரணத்தை சுவைத்தார் (எபிரேயர் 2:9) தம் மரணத்தின் மூலம் மரணத்தின் மீது வல்லமையுள்ள பிசாசை அழித்து,மரணத்திலிருந்தும் வாழ்நாளெல்லாம் மரண பயத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுவித்தார் (எபிரேயர் 2:14, 15)
பாவமே அறியாத இயேசு,ஒருபோதும் பாவம் செய்யாதவர் நமக்காக பாவம் ஆனார், இதனால் நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக ஆக முடியும். தேவன் தனது சித்தம் மற்றும் முன்னறிவிப்பின்படி மனிதனை மீட்டெடுப்பதற்காக,மனிதனின் அதி மேன்மையான நன்மைக்காக எதையும் செய்ய முடியும் மற்றும் எதுவாகவும் மாற முடியும் அது தான் அவர் அன்பு !.ஆமென் 🙏
ஆண்டவரே! ஒன்றுமில்லாத மனிதன் மீது நீங்கள் கண்ணோக்கமாக இருக்க அவன் எம்மாத்திரம்?!
இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம் .