இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

18-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2:7 NKJV

எனது அன்பானவர்களே, நாம் ஏற்கனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மனநிலையில் இருப்பதால், இந்த நாளிலும் இந்த வாரத்திலும் பரிசுத்த ஆவியின் அற்புதமான சிந்தனையை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிகவும் தனித்துவமானது மற்றும் என்றென்றும் அப்படியே இருக்கும்.நாம் அனைவரும் இந்த உலகில் பிறந்த விதம் – மருத்துவமனை,இல்லங்கள்,மற்றும் பயணம் செய்த இடம் போன்றவையாக இருக்கலாம்.ஆனால்,- சர்வவல்லமையுள்ள தேவனின் ஒரே பேறான குமாரனான இயேசுவின் பிறப்பு, ஒரு அரச பரம்பரையில் (தாவீது)இருந்து வந்தாலும் ,ஏழைக்கோலமெடுத்து பிறந்தது குறிப்பிடத்தக்கது. ஆம், பெத்லகேம் என்ற சிறிய நகரத்தில் உள்ள ஒரு விடுதியின் மாட்டுக்கொட்டகையில் நித்திய வார்த்தையானவர் மாம்சமாகி பிறந்தார் .இது உண்மையில் நம் மனதைக் கவர்வதும் மற்றும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாய் தோன்றுகிறது.

ஆனால்,சர்வவல்லமையுள்ள தந்தையின் ஒரே பேறானவரின் தெய்வீக பிறப்பு ,அழிவிலும் இருளிலும் மூழ்கியிருந்த தாழ்ந்த மனிதகுலத்தின்மீதான அவரது அன்பின் பிரதிபலிப்பு என்பது புரிந்துகொள்ளச்செய்கிறது.
.ஆயினும்கூட,தேவ குமாரன் தொழுவத்தில் பிறந்த காரணம் மாபெரும் தேவன் தாழ்ந்த மனுகுலத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட அவருடைய அன்பையும் தேவ நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது .
இதுவே பரிசுத்த அவையானவர் நமக்கு கொடுக்கும் மனுகுமாரனின் தாழ்மையான பிறப்பின் வெளிப்பாடாகும்.

ஆனால் இயேசுவின் மீது இருந்த தேவனின் மகிமையான ஒளியின் நிமித்தம் வானத்தில் திரளான தேவா தூதர் கூட்டம் தோன்றி இந்த நற்செய்தியை மேய்ப்பருக்கு அறிவித்ததனர் .தேவனின் இந்த மகிமையின் நற்செய்தி பேரானந்தத்தை ஏற்ப்படுத்தியது.

என் அன்பு நண்பர்களே,உங்களுக்கும் எனக்கும் கூட இதுவே நற்செய்தி:உங்கள் பின்னணி என்னவாக இருந்தாலும்,அதே தேவனின் ஒளிவட்டம் உங்கள் மீதும் தங்கியிருக்கும், அவருடைய தயவு உங்களை என்றென்றும் சூழ்ந்திருக்கும்,இதனால் அனைத்து மக்களும் (தேவதூதர் மற்றும் மனித இனங்கள் இருவரும்) ) உங்களைத் தேடிக் கெளரவிப்பார்கள்.பூமியில் அவருடைய அமைதியையும், அளவற்ற நல்லெண்ணத்தையும் அனுபவிக்க அவருடைய நன்மை உங்களைத் சூழ்ந்திருக்கும்படி பிராத்திக்கிறேன்!

இயேசுவின் மீது இருந்ததைப் போலவே உங்கள் மீதும் தேவனின் ஒளிவட்டத்திற்காக ஏங்குங்கள், உங்களைச் சுற்றியுள்ள தேவனின் தயவை நீங்கள் அனுபவிப்பீர்கள்,அது உங்களை உயர்த்தும் என்று இயேசுவின் நாமத்தில் வாக்களிக்கிறேன்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *