22-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்த்து ,அவரின் பேரொளி சூழ்ந்திருப்பதில் ஆறுதல் பெறுங்கள்!
17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.லூக்கா 2:17,18 NKJV
இன்றும் கூட கிறிஸ்துமஸ் செய்தி உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஏனென்றால்,அந்தச் செய்தி பரலோகத்திலிருந்து வந்த ஆவிக்குரிய வெளிப்பாடாகும்,அதன் விளைவாக பூமியில் அற்புதங்கள் நடக்கிறது !
நீங்கள் கடவுளிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெறும்போது, நிச்சயமாக அது பூமியில் அற்புதத்தை நடப்பிக்கும்.
இந்த நாளிலும்,தேவனின் குமாரனாகிய இயேசுவின் பிறப்பின் வெளிப்பாட்டிலிருந்து,குமாரனை அனுப்பிய தேவனின் நோக்கம் உங்களை மேம்படுத்துவதற்காக என்பது தெளிவாகிறது.நீங்கள் ஆன்மிக உயர்வை அடைய வேண்டும் என்பதற்காக தேவனின் ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.அதன் விளைவாக உங்கள் மீதுள்ள தேவனின் பேரொளி இயற்கையான ரீதியில் உங்களை உயர்த்தும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் உயர்ந்திருப்பீர்கள்,அதைக் கண்டு உலகம் வியக்கும்.
எழும்பி பிரகாசியுங்கள்,ஏனென்றால் அவருடைய ஒளி (கிறிஸ்து) வந்தது! (ஏசாயா 60:1)ஆமென் 🙏
நீங்கள் செய்ய வேண்டிய பிரகடனம் என்னவென்றால் :”நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்!கிறிஸ்து என்னில் இருக்கிறார் என்பதன் வெளிப்பாடானது அவரது பேரொளி என்மூலம் வெளிப்பட்டு காயப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் ஆறுதல் அளிக்கும் என்பதாகும்!”ஆமென்! 🙏
இயேசுவை நோக்கிப் பார்த்து,அவரின் பேரொளி சூழ்ந்திருப்பதில் ஆறுதல் பெறுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம்.
