07-06-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள் !
3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5. நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.(சங்கீதம் 8:3-5) NKJV.
தாவீது – சங்கீதங்களை எழுதிய பாடலாசிரியர், பாடகர், மேய்ப்பர், கணவர், தந்தை,ராஜா மற்றும் தீர்க்கதரிசியாக வாழ்ந்தவர் . ஆவிக்குரிய மண்டலத்தில்,இரண்டு தேவதூதர்களுக்கு இடையே நடக்கும் உரையாடலைக் கேட்க ஒரு சிறப்பு அபிஷேகம் பெற்றவர்.பிதா மனிதன் மீது கொண்ட அன்பின் நிமித்தமாக அவனை மிகவும் கவனத்தில் கொண்டு, அவனை மகிமை மற்றும் கனத்துடன் முடிசூட்டி மனிதரை ஆசீர்வதிக்க தன் இதயத்தில் பிரியமாயிருந்தார் என்பதை ஆவிக்குரிய மண்டலத்தில் தேவதூதர்கள் அறிந்தனர்.
பரலோகத்தில் உள்ள மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும் போது, மனிதன் தோற்றத்திலும், வலிமையிலும் மிகவும் அற்பமானவன். இருப்பினும், கடவுள் அவன் மீது நிபந்தனையற்ற அன்பை வைத்துள்ளார். மனிதன் அவருடைய தனித்துவமான படைப்பு. எல்லாவற்றையும் படைத்த பிறகு, கடவுள் தன்னைப் பிரதிபலிப்பதற்காக தன்சாயலில் மனிதனை சிருஷ்டித்தார் மற்றும் அவனை மனிதன் என்று அழைத்தார். அல்லேலூயா!
இதில் வியப்பூட்டும் காரியம் என்னவென்றால், கடவுள் நம்மைப் பார்க்கும் விதத்தில் நாம் நம்மைப் பார்க்கவில்லை. ஆனால், தேவ தூதர்கள் கடவுள் நம்மைப் பார்க்கும் விதத்தில் நம்மைப் பார்க்க முடிகிறது. நாம் பாவிகளாக இருக்கும்போதே கிறிஸ்து தேவபக்தியற்றவர்களுக்காக மரித்தார் மற்றும் அதன் மூலம் தேவன் நம்மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். கிறிஸ்து நமக்காக மரித்தார்,நாம் மிகச் சிறந்தவர்களாக இருந்தபோது அல்ல,ஆனால் நாம் மோசமான நிலையில் இருக்கும்போது. இந்த காரியம் தேவதூதர்களையும் பெரிதும் வியக்கச்செய்தது .
நம்முடைய மோசமான நிலையில் மிகச் சிறந்ததைக் கொடுத்தவரை நாம் எப்படி மறப்பது?
அவருடைய அசாத்திய அன்பைப் பற்றி நினைப்பது, அவருடைய மகிமையால் மாற்றப்படுவதற்கு நம் முழு உள்ளத்தையும் திறக்கின்றது . . .ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்