07-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்திய வாழ்வை அனுபவியுங்கள்!
8.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் .(வெளிப்படுத்துதல் 1:8,) NKJV
“இருக்கிறவர்,இருந்தவர் மற்றும் வரப்போகிறவர்”என்பது தேவனின் அற்புதமான மற்றும் மகிமையான அம்சமாகும்.இதன் வெளிப்பாடு நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை ஊக்குவிக்கும் என் அருமை நண்பர்களே.
இயேசுவே அல்பாவும் ஒமேகாவும்,அவர் ஆரம்பமும் முடிவும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, அவர் தன்னை இருப்பவராகவும்,இருந்தவராகவும்,வரப்போகிறவராகவும் வெளிப்படுத்துகிறார்என்பதையும் அறிவீர்கள்.அல்லேலூயா!
பரிசுத்த ஆவியானவர் கிருபையுடன் எனக்கு வழங்கிய நுண்ணறிவைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்:
காலங்களைப் பார்க்கும் போதல்லாம்,அது ‘நேரத்துடன்’ தொடர்புடையதாயிருக்கிறது. இருக்கிறவர் என்பது நிகழ்காலத்தில்,இருந்தவர் என்பது கடந்த காலத்தையும்,வரப்போகிறவர் என்பது வரவிருக்கும் எதிர்காலத்தையும் குறிக்கிறது.
இருப்பினும்,தேவன் நித்தியமானவர்.அவரை ‘காலத்தால்’ அளவிட முடியாது.அவர் காலத்தால் மட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல,அவர் நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை மாறாக அவருக்காக நேரம் காத்திருக்கிறது.அவர் காலத்திற்கு அப்பாற்பட்டவர்._ இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து,அவர் மூடிய கதவை ஊடுருவி நடந்தபோது பூமிக்குரிய விதி அவரை மட்டுப்படுத்த முடியவில்லை _ (யோவான் 20:19).அவர் “இடம்” மூலம் வரையறுக்கப்படவில்லை.
கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்ற காலத்திற்கு கட்டுப்படாத ஆண்டவர் நித்யத்திலிருந்து இந்த காலகட்டத்திற்கு மனித குலத்திற்காக காலடி வைத்தார்.ஏன் என்றால் மனிதன் காலத்திற்கு உட்பட்டு நேரத்தில் பிறந்து,நேரத்திற்காகக் காத்திருந்து காலப்போக்கில் இறந்துவிடுகிறான்.
கிறிஸ்துவுக்குள் என் அன்பானவர்களே! நித்திய தேவன் உங்கள் நேர மண்டலத்தில் அடியெடுத்து வைக்கும்போது நீங்கள் நித்தியத்தை அனுபவிப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் காலத்தை கடந்து செல்வீர்கள்.
_நாம் நேரத்தை மதித்தாலும் காலத்தைக் கட்டுப்படுத்தும் எல்லாம் வல்லதேவனை வணங்குகிறோம்!ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்திய வாழ்வை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம் .