12-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய என்றென்றுமான நீதியை அனுபவியுங்கள்!
20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,எபேசியர் 3:20 NKJV.
தேவன் எல்லாம் வல்லவர்.என்னுடைய பிரார்த்தனைகளை விடவும், என் கற்பனையை விட அதிகமாகவும் அவரால் செய்ய முடியும்.
ஆம் என் அன்பானவர்களே ! நாம் நினைப்பதை விட கடவுளின் திறன் மிக அதிகம். ஆனால் நாம் அவரை மட்டுப்படுத்தமுடியும் (சங்கீதம் 78:41).எப்படி ? நம் யோசனைகளால்!
ஒரு அழகான பாடல் உள்ளது – பிரபஞ்சத்தை உருவாக்க தேவனுக்கு ஒரு வாரம் தான் தேவைப்பட்டது.ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்மை இயேசுவின் சாயலில் மாற்ற பொறுமையாக செயல்படுகிறார்,மேலும் நம்மில் தொடர்ந்து செயல்படுகிறார்.
நாம் அவருடன் ஒத்துழைக்கும்போதும் அவர் நம் எண்ணத்தை மாற்றுகிறார். நாம் வித்தியாசமாக சிந்திக்காவிட்டால்,நம் வாழ்வில் தேவனின் நோக்கம் நிறைவேறுவதை நாம் காண முடியாது.
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளும் அளவுக்கு நம்மை அன்புடன் நேசிக்கிறார். நாம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதை உறுதிசெய்ய அவர் தம்முடைய குமாரனை மனமுவந்து தியாகம் செய்தார்.இயேசு நமக்கான பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றினார், அவர் சிலுவையில் நிர்வாணமாக மரணத்தை எடுத்துக்கொண்டு, அவருடைய குற்றமற்ற இரத்ததால் நம்மை நீதிமான்கள் என்று அறிவித்தார். இயேசு என்றென்றும் உயிருடன் இருப்பதால், இந்த நீதியை நம்மில் என்றென்றும் பாதுகாக்க பிதா அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.ஆமென்!
இயேசு அதோடு நிறுத்தவில்லை, அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை நமக்குள் ஊதினார், நம்மை தேவனுடைய ஆலயமாக்கினார். எப்பொழுதும் நமக்காக இருந்த தேவன், நம்முடனே இருக்க இம்மானுவேலாக வந்தார்,”நம்மில் இருக்கும் கிறிஸ்து“இன்று பரிசுத்த ஆவியின் மூலம் நம்மில் வசிக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,உங்களில் வாழ்கிறவரை உங்களுக்குள் வேலை செய்ய அனுமதியுங்கள், அவர் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டு உங்கள் மூலம் செயல்படுவார்.
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் என்றென்றும் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்பதை அறிக்கையிட எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய என்றென்றுமான நீதியை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம் .