26-07-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அவருடைய பிரசன்னத்தில் வாக்குதத்த நிறைவேறுதலுக்கு கொண்டுவருகிறது!
7. உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
8. அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே .(1 கொரிந்தியர் 2:7-8)
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே சர்வவல்லமையுள்ள தேவன் வகுத்து ஆணையிட்ட மறைவான ஞானம், உங்களை அவருடைய பிரசனத்திற்கு கொண்டுவருகிறது.அப்போது , உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளிலும் நீங்கள் இயேசுவுடன் ஆட்சி செய்யும் மிக உயர்ந்த மண்டலத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் மேற்கொள்வீர்கள்.
இது தேவனின் சாம்ராஜ்யம்,அவருடைய ஆளுகை. அல்லேலூயா! *
பண பலம், புத்தி பலம், ஊடக பலம் அல்லது தசை பலம் எதுவாயினும் மனித புத்திசாலித்தனத்தால் தேவனின் இந்த மண்டலத்திற்குள் நுழைய முடியாது.
எல்லாம் அறிந்தவர், எல்லாம் வல்லவர், எங்கும் நிறைந்தவர் ஆகிய தேவனின் இந்த உயர்ந்த பகுதிக்குள் நுழைவது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் மட்டுமே. இயேசு சிலுவையில் அறையப்பட்டு நமக்காக தியாகம் செய்து அவர் , “முடிந்தது” என்று சொன்னபோது, இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இந்த மறைவான ஞானம் வெளிப்படுகிறது.
சிலுவையில் இயேசு சிந்திய இரத்தம் உங்கள் வாழ்வில் அவருடைய மறைவான ஞானமாக வெளிப்படுகிறது.
அவருடைய இரத்தமே உங்களை என்றென்றும் நீதிமான்களாக்குகிறது (ரோமர் 5:9).
நீங்கள் இதை முழு மனதுடன் நம்பும்போது;
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி என்று இடைவிடாமல் அறிக்கை செய்யும்போது இந்த ஞானம் வெளிப்படுகிறது.;
இன்று காலை உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய வார்த்தையில் ஈடுபடுங்கள், அப்போது உலகத்தாருக்கு மறைந்திருக்கும் தேவனின் ஞானம் இன்று உங்களுக்கு வெளிப்படும் ,நீங்கள் வாலாகாமல் தலையாய் இருப்பீர்கள்.உங்கள் சமகாலத்தவர்களைத் தாண்டி நீங்கள் வெற்றிபெறுவீர்கள். மேலும் உங்கள் எல்லா முயற்சிகளிலும் உலகத்தாரை விட மிஞ்சியிருப்பீர்கள்.
இதன் மூலம் தேவனின் வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் இப்போது இயேசுவின் நாமத்தில் நிறைவேறுகிறதை அனுபவிப்பீர்கள்! ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அவருடைய பிரசன்னத்தில் வாக்குதத்த நிறைவேறுதலுக்கு கொண்டுவருகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.