இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை ஆவிக்குரிய ரகசியங்கள் வெளிப்படுத்தும் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது !

27-07-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை ஆவிக்குரிய ரகசியங்கள் வெளிப்படுத்தும் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது !

6. அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல ,
9. எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார் அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.(I கொரிந்தியர் 2:6, 9-10) NKJV.

தேவன் உங்களுக்காக ஏற்கனவே தயார் செய்திருப்பது உங்கள் புரிதலுக்கும், உங்கள் கற்பனைக்கும், உங்கள் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டது. தேவன் தான் தயார் செய்ததை பரிசுத்த ஆவியின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
பரிசுத்த ஆவியின் மூலம் தேவன் வெளிப்படுத்துவதை ஆவிக்குரிய ரீதியில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் மற்றும் அறிவுபூர்வமாக ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், தேவன்,ஆவியானவர் மற்றும் அவரை வணங்குபவர்கள் அல்லது அவருடன் தொடர்புகொள்பவர்கள் அதை ஆவியிலும் உண்மையிலும் மட்டுமே செய்ய முடியும். (யோவான் 4:24).

நாம் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள விரும்பினால், அந்த நாட்டின் மொழியைப் பேசுகிறோம். அவ்வாறே, சர்வவல்லவரின் இரகசிய இடத்தில் வசிப்பவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் மொழியைப் பேச வேண்டும் .பரிசுத்த ஆவியின் மொழி பரலோகமொழி, இது “பல பாஷை “என்றும் அந்நிய பாஷை என்றும் அழைக்கப்படுகிறது.

நீங்கள் இந்த மொழியைக் கற்கவோ,அறிவார்ந்த முறையில் புரிந்துகொள்ளவோ முடியாது, ஆனால் விசுவாசத்தால் பல பாஷை என்று அழைக்கப்படும் அந்நிய பாஷையை வரமாகப் பெறுவீர்கள். நீங்கள் தேவனிடம் விசுவாசத்தோடு கேட்கும்பொழுது , கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியின் மூலம் இந்த அந்நிய பாஷையை கிருபையாகத் தருகிறார்.இந்த அந்நியபாஷையில் பேசுவது உங்களை தேவனின் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது, அங்கு ஆவிக்குரிய ரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகிறது . அல்லேலூயா!

“ பரிசுத்த பிதாவே, உமது சித்தத்தைப் பற்றிய அறிவால் என்னை முழு ஞானத்திலும்,ஆவிக்குரிய புரிதலிலும் நிரப்புவீராக . பரிசுத்த ஆவியானவரால் எனக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் மற்றும் அந்நிய பாஷையில் பேசும் வரத்தை எனக்குக் கொடுக்க வேண்டுகிறேன். மேலும், இயேசுவின் பெயரில் மனிதக் கண்கள், காதுகள் மற்றும் மனித உணர்வுகளுக்குப் புரியாத ஆவிக்குரிய உண்மைகளால் அறிவொளி பெற வேண்டுகிறேன். ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை ஆவிக்குரிய ரகசியங்கள் வெளிப்படுத்தும் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *