20-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது ,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவிக்கச்செய்கிறது!
18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)
தேவனுடைய குமாரனின் மரணத்தை அவசியமாக்கியது மனிதகுலம் ஆனால் அவருடைய தெய்வீகம் (பரிசுத்த ஆவி) தேவனுடைய குமாரனின் உயிர்த்தெழுதலை அவசியமாக்கியது (ரோமர் 1:4).
அந்த ஜீவனாகிய தேவ குமாரன் மரணத்திற்குத் தன்னயே கொடுத்தது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. மேலும், மரணம் இறுதியாக உயிர்தெழுதலின் வெற்றியில் விழுங்கப்படுகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்வது கடினம் (1 கொரிந்தியர் 15:54,54).
இயேசு நரகத்தில் இருந்தபோது பிசாசு வென்றது போல் தோன்றியது, ஆனால் அவனது கேலிக்குரிய சிரிப்பு 3 பகல் மற்றும் 3 இரவுகள் மட்டுமே நீடித்தது.பிசாசு 6000 வருடங்களாக ஏமாற்றி, ஊழலால் சம்பாதித்த அனைத்தையும் இழந்தான்.மனிதனுக்கு நிரந்தரமானதாகவும்,மீள முடியாததாகவும் தோன்றிய இழப்பு, இயேசுவின் ஞானத்தினாலும், பணிவினாலும் மனிதன் என்றென்றும் திரும்ப பெற்றான், இனி ஒருபோதும் அதை இழக்கமாட்டான். அல்லேலூயா!
ஆம் என் அன்பானவர்களே,வாழ்வில் நீங்கள் சம்பாதித்த பெயர்,புகழ்,செல்வம்,உடல்நலம், அந்தஸ்து , நேரம் போன்றவற்றை இழந்திருக்கலாம், ஆனால் நற்செய்தி என்னவென்றால் இயேசு, மரணம், நோய் மற்றும் பிசாசை வென்று நரகம்,மரணம் என்பதன் திறவுகோல்களை தன் கைகளில் எடுத்தார் .எனவே, நீங்கள் இயேசுவை மட்டும் விசுவாசித்தால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவீர்கள்.அவர் சிலுவையில் உங்கள் மரணத்தை மரித்தார் மற்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து உங்களுக்கு நித்திய வாழ்க்கையை (சாவாமையை) கொடுத்தார்..ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவிக்கச்செய்கிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம் .