26-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,சரியான சத்தியத்தின் வடிவத்தை சிந்தையில் உருவாக்குகிறது!
13. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
15. அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.(மத்தேயு 28:13, 15) NKJV.
ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் அல்லது வலுவாக நம்பிக்கை வைத்திருக்கும் இடத்தில்,ஒருவரின் மனதில் அரண்கள்( STRONG HOLD) உண்மையில் உருவாகிறது.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு, ரோமானிய வீரர்களால் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.ஆனால் பிதாவானவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார். இது அவரது மரணத்திற்கு காரணமானவர்களிடம் தெரிவிக்கப்பட்டதும், அவருடைய சீஷர்கள் உடலைத் திருடிச் சென்றதாகப் புகாரளிக்க ரோமானிய வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்தனர். இது செய்திகளில் தலைப்புச் செய்தியாக மாறியது, மேலும் இதுவே யூதர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாக இன்று வரை நம்பப்படுகிறது.
பிசாசுகளின் அரண் என்பது பொய்கள் மற்றும் வஞ்சனைகள் அடிப்படையாகக் கொண்ட ஒரு வலுவான தவறான சிந்தனை வடிவமாகும்.
இன்றுவரை யூதர்கள் இந்த தவறான செய்தியை நம்புகிறார்கள்.ஆகவே,இன்னும் அவர் வரவில்லை என்பது போல் தங்கள் மேசியாவுக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஒரு உண்மையான மதம் ஒரு பொய்யின் மூலம் எவ்வாறு ஒரு தவறான தகவலை அப்பாவித்தனமாக நம்பும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறோம்.மற்றும் கிறிஸ்துவில் தேவன் ஏற்கனவே வைத்திருக்கும் நன்மையை ஒருபோதும் காணமுடியாதபடி செய்து,அடுத்தடுத்த தலைமுறைகளின் விசுவாசத்திற்கும் பெரும்அழிவைஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது .
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நாம் சரியாக வாழாததற்குக் காரணம்,சத்தியம் என்ன என்பதை நாம் விசுவாசியாதது தான்.கலாச்சாரம் மற்றும் நம் முன்னோர்களின் அனுபவங்கள் மூலம் நமக்குக் உந்தப்பட்ட ஒரு மனநிலையை நாம் வெறுமனே நம்பி பின்பற்றுகிறோம் .
எனினும், சத்திய ஆவியான பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, அவர் நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார்.மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கும் இயேசுவை நமக்கு வெளிப்படுத்துகிறார்.மற்றும் அவர் பரிசுத்த வேதாகமத்தின்படி நம் வாழ்வில் நடக்கச்செய்து இயேசுவின் நாமத்தில் சொல்லப்படாத, கேள்விப்படாத மற்றும் முன் சம்பவிக்காத ஆசீர்வாதங்களை இன்றே நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறார். ஆமென் 🙏.
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,சரியான சத்தியத்தின் வடிவத்தை சிந்தையில் உருவாக்குகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம் .