06-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை தகுதியும்,வலிமையும் உடையவராய் ஆக்குகிறது!.
5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். (வெளிப்படுத்துதல் 5:5-6) NKJV
அந்தச் சுருளின் முத்திரைகளைத் திறப்பதற்குத் தகுதியான மற்றும் வலிமையான எவரும் காணப்படாததால், யோவான் அழுதுகொண்டிருந்தார்.அப்போது மூப்பர்களில் ஒருவர்,யூதா கோத்திரத்தின் சிங்கமாகிய இயேசுவைக் காட்டி அவருக்கு ஆறுதல் கூறினார்.ஆனால் யோவான் பார்க்கையில்,ஆட்டுக்குட்டியானவரான இயேசுவைக் கண்டான்.
சிங்கத்தை விட தைரியமும் வலிமையும் உடையவர் யார்? ஆட்டுக்குட்டியைவிட சாந்தகுணமுள்ளவர் யார்?
இயேசுவே மரணம், பாதாளம் மற்றும் பிசாசை வென்ற யூதா கோத்திரத்தின் சிங்கம் மேலும் உலகின் பாவங்களுக்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரும் அவரே.
ஆம் என் அன்பானவர்களே,மகிழ்ந்து களிகூறுங்கள், இயேசுவின் இரத்தம் உங்கள் எல்லா பாவங்களையும் நீக்கி,தேவனின் சிறந்ததை உங்களுக்கு வெளிப்படுத்தத் தகுதியானது.
தேவனின் ஆட்டுக்குட்டியானவரின் இந்த அம்சத்தை மட்டும் அறிவது அவர் தியாகத்தின் பாதியை மட்டுமே அறிவதாகும்.ஆனால்,மகிழுந்து களிகூறுங்கள்!இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற உன்னதனமான சத்தியம் உங்களையும்,என்னையும் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் மேற்க்கொண்டு எல்லா வெற்றிக்கும் பாத்திரராக்குகிறது.இதுவே உண்மையான சத்தியம்.அல்லேலூயா!
உங்களை என்றென்றும் மிகவும் தகுதியுள்ளவர்களாக மாற்றுவதற்காக இயேசு ஆட்டுக்குட்டியாக கொல்லப்பட்டார்.மற்றும் உங்களை என்றென்றும் வலிமையுள்ளவர்களாக ஆக்குவதற்காக சிங்கத்தின் கர்ஜனையைப் போன்ற இடிமுழக்க தொனியுடன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா!ஆமென் 🙏
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிங்கமும்,ஆட்டுக்குடியானவருமாய் இருப்பவருக்கு நிகரானவர் யார்! பரம்பொருளேப் போற்றி ( PRAISE ADONAI ) !!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை தகுதியும்,வலிமையும் உடையவராய் ஆக்குகிறது!.
.
கிருபை நற்செய்தி தேவாலயம் .