10-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.ரோமர் 8:15 NKJV
மனிதகுலத்தின் வரலாறு முழுவதும், பாதிரியார்கள் / போதகர்கள் தேவனின் விஷயத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வில் அச்சுறுத்தல், தண்டனை மற்றும் நரகம் என்பதை போதிக்கிறார்கள்.அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு அடிமைத்தனமாக செயல்படுகிறது.
மனிதர்கள் பயத்தினால் தேவனுக்கு சேவை செய்தார்கள்,ஒருபோதும் அன்பினால் அல்ல. அப்படியே தோல்விக்கு பயந்து தசமபாகம் கொடுக்கிறார்கள்.மோசேயின் நியாயப்பிரமாணமானது,அந்த சட்டத்தின்படி இணங்காததற்கு பல சாபங்களைக் கொண்டிருந்தது.அந்த சாபங்கள் பற்றிய பயம் வழிபாட்டாளர்களைப் அச்சுறுத்தியது,மேலும் யாரேனும் நீண்டகால நோய் அல்லது நிரந்தர துரதிர்ஷ்டத்தால் அவதிப்பட்டால்,அது அவர்களின் பாவத்தின் காரணமாக எண்ணப்பட்டு தேவனின் தண்டனையாகக் கூறப்படுகிறது.
யோவான் 9:2 இல் இருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது ஒரு சிறந்த உதாரணம். குருடனாகப் பிறந்த மனிதனின் குருட்டுத்தன்மை அவனது பாவம் அல்லது அவனது பெற்றோரின் பாவம் என்று காரணம் காட்டப் ப்பட்டது.இந்த பிசாசின் தாக்குதலிலிருந்து யாரும் தப்பியதில்லை,நீதியுள்ள யோபு கூட இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த பூமிக்கு இயேசுவின் வருகை மனிதகுலத்தின் பாவம்,மற்றும் சாபங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது மற்றும் அதனுடன் தொடர்புடைய பயம் மற்றும் தண்டனையிலிருந்து மனிதகுலத்தை விடுவித்தது. நம்மை என்றென்றும் நீதிமான்களாக்க அவர் பாவமாக மாறினார்.அவர் நம்மை என்றென்றும் ஆசீர்வதிக்க சாபமாக மாறினார்.அவர் உலகித்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் மரணத்தை ருசித்தார்,மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அன்பினால் தேவனை அப்பா,பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை நமக்கு கொடுத்தார்.நாம் இனி பயம் மற்றும் அடிமைத்தனத்தால் அழுவதில்லை. ஆமென் !
எனது அன்பு நண்பர்களே, தேவன் இப்போது நம் அப்பா,பிதா என்பது ஒரு அனுபவம். இது என்றென்றும் தொடரும் அனுபவம். இயேசுவின் அன்பை நாம் பெறும்போது பரிசுத்த ஆவியின் தெய்வீக செயல்பாட்டின் மூலம் இது நிகழ்கிறது.
நாம் பாவிகளாக,தேவபக்தியற்றவர்களாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காக மரித்தது,தேவன் நம்மை எவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்பதற்கு சான்று.இதை நினைக்கும்போது நம் மனம் துதியினால் நிறைந்து அவர் நாமத்தை உயர்த்துகிறது!ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !
கிருபை நற்செய்தி தேவாலயம்.