15-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறது!
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது,அவன்:என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது,நானோ பசியினால் சாகிறேன்.லூக்கா 15:17NKJV.
“அவன் தானே நிதானத்திற்கு வந்தான் அல்லது புத்தி தெளிந்தது”என்ற பகுதிதான் ஊதாரி மகனின் வாழ்வில் மீட்பிற்கான திருப்புமுனை*.அவன் நிதானத்திற்கு வருவதற்கு முன்,தன் சுயபுத்திக்கு புறம்பே இருந்தான் என்பது வெளிப்பாடு.
அவன் ஈர்க்கப்பட்டு செல்வத்தையும் கவர்ச்சியையும் பின்தொடர்ந்தான்,அதன் விளைவாக வறுமை ஏற்பட்டது. அவன் மனித உதவியை நாடி வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்ததன் மூலம் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டான்.
ஆனால், தன் தந்தையால் மட்டுமே தன்னை நிபந்தனையின்றி உண்மையாக நேசிக்கவும்,பராமரிக்கவும் முடியும் என்ற உண்மையை நிதானத்திற்கு வந்தவுடன் புரிந்துகொண்டான்.தன் தந்தையின் வீட்டில் மட்டுமே அன்பும்,ஆசீர்வாதங்களும் ஏராளமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டான்.
ஆம் என் அன்பானவர்களே,நம் அப்பாவாகிய தேவனே நம் பாதுகாவலர் என்று நம்பலாம்.இயேசுவில் பிராண சிநேகதர் உண்டு என்ற அருமையான பாடல் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஆம்,அவரில் நம்முடைய கவலைகளும், பாரங்களும் தீர்க்கப்படுகிறது என்ற உறுதி நமக்கு இருக்கிறது .
விண்வெளியில் ஏவப்பட்ட பிறகு,விரும்பிய இலக்கை நோக்கிச் சென்றடைவதற்கு,ஒரு விண்கலத்திற்கு முறையான வழிதிருத்தி அமைத்தல் (COURSE CORRECTION ) தேவைப்படுவதைப் போலவே, நமது இதயத்திற்கும் ஒவ்வொரு நாளும் ஒரு பாடத் திருத்தம் தேவைப்படுகிறது.
மனிதன் அப்பத்தினால் மாத்திரம் வாழாமல்,அவன் விரும்பிய புகலிடத்திற்கு அவனை வழிநடத்தும் தேவனின் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வழிநடத்தப்படுகிறான்.
ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தினசரி அடிப்படையில் நம்மை நடத்தும் கிருபையை நமக்கு வழங்குவாராக,இதனால் நாம் அப்பாவின் அன்பான மற்றும் இரக்கமுள்ள கரங்களுக்குள் பாதுகாக்கப்படுகிறோம்! ஆமென் 🙏.
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.