இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை பெறுவதற்கு நம்மை திரும்பச்செய்கிறது!

16-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை பெறுவதற்கு நம்மை திரும்பச்செய்கிறது!

18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; லூக்கா 15:18 ,19NKJV.

ஊதாரியான இளைய மகன் பரலோகத்திற்கு எதிராகவும் (அதாவது தேவனுக்கு எதிராகவும்) தனது தந்தைக்கு எதிராகவும் பாவம் செய்ததாக ஒப்புக்கொண்டான் .
அப்படியென்றால் அவன் செய்த பாவம் என்ன?

தந்தையின் சொத்தில் மகன் தன் பங்கைக் கேட்டது பாவமா(வ12) ?
இல்லை ! ஏனென்றால், தந்தை தனது பரம்பரை சொத்தை சகோதரர்கள் இருவருக்கும் சமமாக பிரித்து அதைக் கோராத மூத்த மகனுக்கும் கூட கொடுத்தார்.

அப்படியானால்,அந்த ஊதாரியான இளைய மகன் தனது பரம்பரை சொத்தை தூர நாட்டிற்கு எடுத்துச் சென்று,தனது உடைமைகளை எல்லாம் ஊதாரித்தனமாக வீணடித்தது பாவமா (v13) ?
அவனுடைய பரம்பரைப் பங்கு இப்போது அவனுடையது,அதை அவன் விரும்பிய விதத்தில் பயன்படுத்த அவனுக்கு உரிமை உண்டு எனவே எல்லா சொத்தையும் அவன் தவறான முறையில் வீணடித்து செலவிட்டு முடித்து விட்டான்.அதின் கொடுமையையும் அனுபவித்தான்.

ஆகவே அவன் செய்த பாவம் என்ன ?
அவன் தனது சொந்த விருப்பம் மற்றும் தன்னிச்சையால் காரணமின்றி தனது அன்பான தந்தையிடமிருந்து பிரிந்து சென்றான் அதுவே பாவம். எனவே,அவன் எழுந்து தனது தந்தையிடம் திரும்ப முடிவு செய்தான்.

மனிதர்களின் பொதுவான அம்சம் என்னவென்றால், தாங்கள் பாவம் செய்ததை உணர்ந்தவுடன், அவர்கள் தங்களைத் தண்டிக்க விரும்புவார்கள். எனவே,அந்த ஊதாரி மகன் தனது தவறான தேர்வுகள் மற்றும் செயல்களுக்காக தனது தந்தையின் வீட்டில் வேலைக்காரனாக மாற முடிவு செய்தான்.
ஆனால் தந்தை ஒருபோதும் தனது மகனை மறுக்கவில்லை. தந்தையின் பார்வையில் இன்னும் அவருடைய மகன்,எப்போதும் அவருடைய மகனாகவே இருக்கிறான் . தொலைந்து போய் இப்போது கிடைத்த மகன் திரும்பியதும், தந்தை அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார், இரக்கத்துடன் நடத்தினார், மேலும் அவனை தனது மகனாகக் கருதி, மற்றவர்களை அவருடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாட ஊக்குவித்தார்.

அதுபோலவே, என் பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுவின் மரணம் உங்களை எப்போதும் நீதிமான்களாக்கி,பிதாவாகிய தேவனோடு அவருடைய அன்பான பிள்ளையாக உங்களை ஒப்புரவாக்கியது. நமது பாவங்கள் அனைத்தும் சிலுவையில் கழுவப்பட்டன.
நாம் நம் நிதானத்திற்கு வந்து பிதாவின் நற்குணத்தை உணர்ந்தால்தான் உண்மையான மனந்திரும்புதல் வரும். ஆம்,தேவன் எப்போதும் நல்லவர்! பிதாவின் அன்பு நிபந்தனையற்றது.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை பெறுவதற்கு நம்மை திரும்பச்செய்கிறது*!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *