22-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது!
45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
மார்க் 6:45, 48-49 NKJV.
இந்தச் சந்தர்ப்பத்தில் சீஷர்களுக்குத் தந்தை அளித்த வழிகாட்டுதல்,இன்றும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் அல்லது கடந்து செல்லும் நமது தற்போதைய போராட்டங்களுக்குத் தீர்வுகளைத் தருகிறது.
சீஷர்கள் தேவனின் வார்த்தையில் புரிந்துகொள்ளத் தவறிய இரண்டு பகுதிகள் உள்ளன.
1.தீவிரப் போராட்டத்தை ஏற்படுத்திய எதிர்க் காற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.(இன்றும் என்னுடைய தற்போதைய போராட்டத்தில் தேவன் என்ன சொல்கிறார்?)
2. அவர்களின் போராட்டத்தின் போது புயலின் மத்தியில் இயேசு கடலின் மீது நடந்து வந்ததை அவர்கள் கண்டு அவரை பேய் என்று எண்ணி அவர் கொண்டு வந்த தெய்வீக உதவியை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.எனது வாழ்விலும் இன்று தேவன் அளிக்கும் உதவி அல்லது – தெய்விக சந்திப்பு ( KAIROS MOMENT) மற்றும் அதிசயத்தை எப்படி அனுபவிப்பது ?இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில்,போராட்டத்தின் மத்தியில் விடுபட இயேசுவை மட்டும் பார்க்க வேண்டும்.
என் அன்பு நண்பர்களே,இன்றைக்கு நான் உங்களுக்கு முதலாவது பகுதியை விளக்க உதவுகிறேன், இரண்டாவது பகுதியை கர்த்தருக்கு சித்தமானால் நாளை விளக்குகிறேன்.
நீங்கள் போராட்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம்,உலகதின் ஞானமும் உடல் வலிமையும் உங்களைத் தோல்வியடையச் செய்யும்.மாறாக,போராட்டத்தில் இயேசுவைப் பற்றிய புதிய வெளிப்பாடு உங்களை தப்புவித்து,அதிசயமாக கரை சேர்க்கும்.
இயேசுவிடம் சரணடைந்து அவரது உதவியை நாட வேண்டிய நேரம் இது.போராட்டத்தில் மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி நமக்கு விடுதலை அளிக்கும் வழியை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் புத்திசாலித்தனமான காரியமாகும்.
நீங்கள் எதை இழந்தாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் நேர்மையை இழக்காதீர்கள்.உனக்கு நீ நேர்மையாக இருப்பதே விடுதலையின்ஆரம்ப புள்ளி.ஊதாரி மகனுக்கு நடந்தது போல புத்தி தெளிவது தான் விடுதலையை கொண்டுவரும் தீர்வாக விளங்கும்.
சுய பரிசோதனை மிகவும் சங்கடமானது, ஆனால் இது உங்கள் விடுதலைக்கான வசந்தகாலத்தின் துளிர் விடுவது போலாகும்.
மனித பலத்தின் முடிவு தெய்வீக கிருபையின் ஆரம்பம்.
நினைவில் கொள்ளுங்கள்,நான் என் பிரச்சனைக்கான பொறுப்பை ஏற்கும்போது அதிசயம் நடக்கிறது. ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது.!
கிருபை நற்செய்தி தேவாலயம்.