24-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை இயற்கையிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்டதாக மாற்றுகிறது!
48.அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால்,அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்..மார்க் 6:48 NKJV.
சீஷர்களை முன்பாக போக சொல்லிவிட்டு கர்த்தராகிய இயேசு மலை உச்சிக்கு சென்று ஜெபித்தார்.9 மணி நேரம் அயராது படகோட்டிப் பயணித்த பின்னரும் சீஷர்கள் வெறும் 6-8 மைல் அகலமுள்ள கடலின் நடுப்பகுதியை தான் அடைந்தனர்,அவர்கள் எதிர் காற்றின் சீற்றத்தால் எதிர்த்துப் போராடி வந்ததை இயேசு கண்டார்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,இயேசு அவர்களை அந்த தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது. மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,அவர் மலையிலிருந்து நீர் விளிம்பிற்கு வந்து, கொந்தளிப்பான கடலில் சுமார் 3-4 மைல்கள் புயலின் மத்தியில் வேகமாகவும் ,இலகுவாகவும் நடந்து, சீஷர்களுக்கு பின்னால் இருந்து முன்பாக கடந்து சென்றார்.இது எல்லாம் சிறிது நேரத்தில் நடந்தது. இது மனிதனால் சாத்தியமற்றது!
என் அன்பானவர்களே,இது ஆவி மண்டலத்தில்-புயலின் மத்தியில்,கலங்கிய நீருக்கு மேலே,புவியீர்ப்பு விசைக்கு அப்பால்,ரதங்களை விட வேகமாக நகர்கிறது என்பதற்கு இது ஒரு சரியான நிரூபணம்,எலியா தீர்க்கதரிசி கால் நடையாக ஆகாப் ராஜாவின் ரதத்தையும்,குதிரைகளையும் விட விரைந்து யெஸ்ரயேலின் வாசலில் போய் நின்றான் – கர்த்தருடைய ஆவி அவன்மேல் வந்ததால் இது சாத்தியமானது. (குறிப்பு 1ராஜா 18:45) NKJV).
யோனா தீர்க்கதரிசியும் நினிவேக்கு செல்லும் 3 நாள் பயணத்தை ஒரு நாளுக்குள் கடந்து சென்றார். (குறிப்பு யோனா 3:3,4 NKJV).
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால்,இயேசு செயல்படுவதற்கு முன்பு பிதாவுக்கு நன்றி செலுத்தி ஜெபித்து தொடங்கினார்.மறுபுறம்,சீஷர்கள் நேரடியாக வேலை செய்யத் தொடங்கினார்கள்.
இயேசு முழு மனிதராக இருந்தபோதிலும்,பிதாவுடன் வழக்கமான உரையாடல் இருந்ததால்,இயற்கை விதிகளை மீறும் செயல்களை நிரூபிக்கும் வகையில் அவரின் ஆவிக்குரிய வாழ்க்கை உயர்ந்திருந்தது. ஆனால், சீஷர்கள் தங்கள் சொந்த பலத்தால் தடையை கடக்க முயன்றனர் ஆனால்,பலன் பெறமுடியவில்லை- இது பிரார்த்தனை இல்லாமல் ஒரு காரியத்தை செயல்படுவதன் விளைவு!
பிரார்த்தனை நம்மை ஆவிக்குரிய நிலைக்கு உயர்த்துகிறது, அதனால் செயல்திறன் சிரமமில்லாமல் இருக்கும்.
இன்று காலை,இந்தப் புதிய பரிமாணத்தில் நடக்க தேவனைத் தேடுவோம்,அவருடைய விருப்பத்தை (தேவனின் விருப்பமான விதியை) பரலோகதில் செய்யப்படுவது போல் பூமியில் நிறைவேற்றுவதற்காக, எல்லாப் பகுதிகளிலும் அவருடன் இணைவதற்கு நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வோம்.நமது (KAIROS MOMENTS) தேவதருணங்களில் ,நமது எதிர்காலத்தை தாமதப்படுத்த முயற்சிக்கும் புயல்களிலிருந்து உடனடியாக இயேசுவின் நாமத்தில் விடுபடுவோம்!! ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை இயற்கையிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்டதாக மாற்றுகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.