28-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை பெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது!
16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.ரோமர் 8:15-17 NKJV
பிள்ளைகளுக்கு மட்டுமே தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற தகுதி உள்ளது,அதுபோல பிதாவிடமிருந்து பிறந்த தேவபிள்ளைகளும் தங்கள் தந்தையாகிய கடவுளிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறுகிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய இருதயத்தில் இருந்து ஆழமான விஷயங்களை எடுத்து,தேவனுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் அதை வெளிப்படுத்துகிறார்.
ஆம் என் பிரியமானவர்களே, இயேசு உங்களுக்காக மரித்தார் என்பதையும், தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதையும் நீங்கள் உங்கள் இருதயத்தில் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் தேவனால் பிறக்கின்றீர்கள்.
பரிசுத்த ஆவியானவர் இயேசுவை தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபேசியர் 1:13). அல்லேலூயா!
அதன்பிறகு,தேவன் பரிசுத்த ஆவியானவரை பரிசாக உங்களுக்குத் தருகிறார்,அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய ஆஸ்தியின் அச்சாரமாயிருக்கிறார்.(எபேசியர் 1:14).
இதன் பொருள், நமது பிதாவாகிய தேவன்,தம்முடைய ஆஸ்தி என்றென்றும் உங்களுடையது என்பதை உறுதிப்படுத்துவதற்காக,பரிசுத்த ஆவியின் மூலம் காப்பீடு செய்திருக்கிறார். அல்லேலூயா!
என் அன்பான நண்பர்களே,உங்கள் ஆஸ்தியை யாராலும் திருட முடியாது.அது என்றென்றும் பாதுகாக்கப்படுகிறது.தேவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள்.சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், கடந்த காலத்தில் நீங்கள் எதை இழந்திருந்தாலும்,உங்களுக்காக பிரத்தியேகமான உங்கள் ஆஸ்திக்கான உத்தரவாதமாக உங்கள் தந்தை பரிசுத்த ஆவியால் உங்களை முத்திரையிட்டார்.
நீங்களே தள்ளிவிட்டாலொழிய,உங்கள் ஆஸ்தி என்றென்றும் உங்களுடையது! ஆமென் 🙏.
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை பெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.