07-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவருடைய மகிமைக்குள் மறுரூபமடையச்செய்கிறது!
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். வெளிப்படுத்துதல் 22:7 NKJV.
தேவனின் பெரிய- தருணங்கள் ( KAIROS MOMENTS ) திடீரென்று நடக்கும்! உண்மையைச் சொல்வதானால், ‘விரைவாக’ மற்றும் ‘திடீர் ‘ என்று சொல்வதில் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு இடத்தை விரைவாக அடைவது என்பது வேறு,திடீரென்று அங்கு சென்றடைவது வேறு.அதுவே அவரின் பாணியாக உள்ளது.!!
மனிதர்கள் வாழ்வில் அவரது சந்திப்புகள் திடீரென்று நிகழ்ந்தன. இம்மாதம் நாம் கொண்டாடும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி பார்ப்போமானால் -கன்னிப் பிறப்பைப்பற்றி மரியாளுக்கு தேவதூதன் திடீரென்று தோன்றி கூறியதும் மரியாள் அதிர்ச்சியுடனும்,வியப்புடனும் காணப்பட்டாள்*.தேவகுமாரன் பிறப்பை அறிவிக்க அன்னை மரியாளிடம் வந்த தேவதூதன் அவள் அதிர்ச்சியுற்றதை கண்டதும் , முதலில் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது.
கன்னியாகிய அவள் தன் வயிற்றில் கருத்தரிக்கப் போகிறாள் என்ற அந்த நற்செய்தியின் அறிவிப்பு அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது,ஏனென்றால் இன்னும் திருமணம் ஆகாததால் அது எப்படி சாத்தியமாகும் என்று அவள் கேள்வி எழுப்பினாள்.
ஆம்! தேவ தருணங்கள் நிகழும்போது அது அனைத்து தர்க்கங்களையும் இயற்கையான பகுத்தறிவையும் மீறும்.அது இயற்கைக்கு அப்பாற்பட்டது!
இருப்பினும், இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால்,அவள் விரைவாகக் கருவுறவில்லை,ஆனால் திடிரென்று கருவுற்றாள்.அவளுடைய கருவுறுதல் தெய்வீகமானது.ஆம்,ஒரே பேறான குமாரனின் கருத்தரிப்பு தனித்துவமானது.பரிசுத்த ஆவியின் வல்லமையால் அது உருவானது-அதை நினைத்தால் ஆச்சரியமானதுமாய்,அருமையுமாய் நம் மனதை வருடுகிறது!
என் அன்பான நண்பர்களே,நீங்கள் தெய்வீக தலையீட்டை தீவிரமாக நாடும் பகுதியில் பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையிலும் இத்தகைய திடீர் அற்புதத்தை கொண்டு வர முடியும். இது உங்கள் தருணம்! இப்போது உங்கள் நேரம் !! அல்லேலூயா !
உங்கள் பதவி உயர்வு இப்போதே!உங்கள் குணமடைதல் திடீரென்று இன்றே துளிர்விடும்!! நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறீர்கள்!!! ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவருடைய மகிமைக்குள் மறுரூபமடையச்செய்கிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.