08-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது.உங்களில் உள்ள கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துகிறது!
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:11,13-14 NKJV
தாவீதின் ஊரான பெத்லகேமில் தேவனின் ஒரே பேறான குமாரன் பிறந்தார் என்பதை முதலில் அறிந்தவர்கள் மேய்ப்பர்கள்.திடீரென்று பரலோகத்திலிருந்து தேவதூதர்களின் சேனையும் ,மாபெரிய வெளிச்சமும் ,நற்செய்தியும் மகிமையாய் அறிவிக்கப்பட்டது.
உலகிற்கு,கிறிஸ்துமஸ் என்றால் இயேசு பிறந்ததினம் என்று கருதப்படுகிறது ,ஆனால் அன்னை மரியாளுக்கு இயேசு வயிற்றில் கருவுற்றபோதே கிறிஸ்துமஸாக இருந்தது.
மரியாளுடைய கருத்தரிப்பு அதிசயமும்,அற்புதமும் ,தெய்வீகமானது.அது திடீரென்று நடந்தது.கிறிஸ்து அவளுக்குள் இருந்தார்,ஆனால் உலகத்திற்கு மறைக்கப்பட்டார்.மேலும் கர்ப்பமான 9 மாதங்கள் வரை,பிதாவின் வாக்குத்தத்தம் உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்டது.
அதுபோலவே,என் அன்பு நண்பர்களே,பரிசுத்த ஆவியானவர் தனிப்பட்ட முறையிலும்,அந்தரங்கத்திலும் உங்களோடு திடீரென்று இடைப்பட்டு ,உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக செய்யப்போகிறார்.மரியாளைப் போலவே,நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்திருக்கலாம்,வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கு இன்னும் நிலுவையில் இருக்கலாம் . ஆனால் உங்களிலுள்ள கிறிஸ்து திடீரென்று உங்கள் மூலம் கிறிஸ்துவை வெளிப்படுத்துவார்.மகிமை!!!
தேவனின் மகிமையின் திடீர் வெளிப்பாட்டைக் கண்டு மேய்ப்பர்கள் ஆச்சர்யமடைந்தது போல் உங்களுக்குள் இருக்கும் தேவவாக்கின் மகிமையான நிறைவேறுதலைக்கண்டு உலகம் ஆச்சரியப்படும். ஆம்! “புறஜாதிகள் உங்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள், ராஜாக்கள் உங்கள் எழுச்சியின் பிரகாசத்திற்கு வருவார்கள்.” (ஏசாயா 60:3). அதுதான் இன்று உங்களின் அரும்பெரும் வெளிப்பாடு!
என் அன்பானவர்களே, நிறைவேறும் காலம் வரை உங்கள் இதயத்தில் தீர்க்கதரிசனத்தை தீவிரமாகவும், உயிரோட்டமாகவும் காத்து வைத்திருங்கள்.நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து அறிக்கையிடுங்கள். ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது.உங்களில் உள்ள கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.
