11-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவர் மகிமைக்கு நம்மை மறுரூபமடையச்செய்கிறது!
25. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26. சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.அப்போஸ்தலர் 16:25-26 NKJV
பெரிய தேவ தருணங்கள்(KAIROS MOMENTS) திடீரென்று நடக்கும்!
பவுலுக்கும் சீலாவுக்கும் அதுதான் நடந்தது,அவர்களுடைய ஜெபங்களையும் பாடலையும் கேட்டுக்கொண்டிருந்த அனைத்து கைதிகளுக்கும் கூட அது நடந்தது,ஆராதித்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று தேவன் அனைவருக்கும் அவரது தெய்வீக விடுதலையை வழங்கினார்.அல்லேலூயா!
என் அன்பு நண்பர்களே,இது “திடீர் அற்புதங்கள் நிகழ்கின்ற மாதம்“.நீங்கள் எவ்வளவு காலம் பிணைக்கப்பட்டிருந்தாலும் – பழக்கவழக்கமான பாவத்தில் பிணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது பொருள் வறுமையில் பிணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மனித அடிமைத்தனத்தில் பிணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது தொடர்ச்சியான பற்றாக்குறையில் அல்லது நோயில் பிணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மன இயலாமையில் அதாவது “என்னால் இது முடியாது” என்ற மனப்பாண்மையில் பிணைக்கப்பட்டிருந்தாலும் ஆகியவைகளிலிலிருந்து உங்கள் அடிமைச் சங்கிலிகள் இன்றே இயேசுவின் பெயரில் நிரந்தரமாக உடைக்கப்படுகின்றன!
இந்த வாரம், இந்த தருணம் தொடங்கி, எல்லாம் வல்ல தேவன் திடீரென்று தோன்றுவார் என்று எதிர்பாருங்கள். ஆமென் 🙏. பிரியமானவர்களே,ஆவி மண்டலத்தில் தொடர்ந்து ஒலிக்கும் ‘ஆமென்’ சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது. ஆகவே,இது உங்கள் நாள்! அல்லேலூயா!
உங்களால் அல்லது உங்கள் தந்தையால் அல்லது உங்கள் முன்னோர்களால் இதுவரை செய்ய முடியாததை, இயேசுவின் நாமத்தில் நிறைவேற்றி அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது!
தேவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள் மற்றும் கிறிஸ்து இயேசுவில் நீங்கள் தேவனின் நீதி என்று அறிக்கையிடுங்கள்,இன்று உங்கள் விடுதலையை நீங்கள் அனுபவிப்பீர்கள்! ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவர் மகிமைக்கு நம்மை மறுரூபமடையச்செய்கிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.