07-07-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அருமையை நமக்கு புரியச்செய்கிறது .!
2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; (லூக்கா 11:2) NKJV
.
நமது அன்பான பிதாவுக்கு துதி மற்றும் கனத்துடன் தொடங்கும் பிரார்த்தனையானது நம் அப்பா பிதாவிடம் நெருங்கும் மிகவும் வல்லமை வாய்ந்த அணுகுமுறையாகும்.
ஒருவர் நம்முடன் நெருங்கி பழகினால் எப்போதும் நாம் அவருக்கு பரிச்சயமனதால் சில நேரங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் .ஆனால், தேவன் தேவனாகவே இருக்கிறார்.அவர் நம் பிதா என்றாலும் நமது நெருக்கமானது அவருடைய நீதியான தராதரங்களையும்,மகத்துவத்தையும் நமக்காக வளைக்க முடியாது . ” *உம் நாமம் பரிசுத்தபடுவதாக “என்றால் , ” அவர் கனத்துடன் மிகவும் மதிக்கப்படுகிவராயிருக்கிறார் “.
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதையும் உள்ளடக்கி, இந்தியா வரை தனது ஆதிக்கத்தை விரிவு படுத்தியிருந்த மன்னரும்,பேரரசருமாகியவர் எஸ்தெரின் கணவர். ராணி எஸ்தர் தனது கணவரிடம் ஒரு மனு செய்ய விரும்பியபோது, அவளுடைய அணுகுமுறையில் அவருக்கு உயர்ந்த மரியாதையும் கனமும் இருந்தது.
என் அன்பானவர்களே , நாம் தேவனை எவ்வளவு அறிந்திருந்தாலும், அவரைப் பற்றிய நமது அறிவுக்கு எப்போதும் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் . நாம் அனைத்தையும் அறிந்திருப்பது போல் நாம் அவரை அறிவோம் என்று கூறுவது சாத்தியமாகாது.அவருடைய வழிகள் ஆராய முடியாதவை.
செராஃபிம்களின் தரவரிசையில் உள்ள பெரிய தேவ தூதர்கள் கூட,தேவனுக்கு மிக நெருக்கமானவர்களாகவும், தங்கள் செயல்பாடுகளில் வல்லமை வாய்ந்தவர்களாகவும் புரிந்து கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் அவர்கள் ” பரிசுத்தர பரிசுத்தர் ” என்று துதிப்பதை நிறுத்துவதில்லை . . நான் இவற்றை விளக்க முற்பட்டால்,அந்த தூய்மையான வழிபாட்டின் மகத்துவத்தை விவரிக்க வார்த்தை இல்லாமல் போகும்.
எங்கள் பரம பிதாவே , நீங்கள் பெரியவர், மிகவும் போற்றப்படதக்கவர் .உங்களைப் போல வணக்கத்திற்கும் உயர்ந்த மரியாதைக்கும் தகுதியானவர் வேறு யாரும் இல்லை.உங்கள் வழிகளின் அற்புதத்தை கண்டு பிரமிப்பு மற்றும் பயபக்தியுடன் நிற்கிறோம். உமது பொறுமையும், நீடிய சாந்தமும் எங்களைத் பணியச்செய்கிறது , உமது உறுதியான அன்பு எங்களை வாஞ்சையோடுப் பணி செய்யும் ஊளியர்களாக்குகிறது.ஏனென்றால், உமது நிபந்தனையற்ற அன்புக்கு நாங்கள் அடிமைகள். எங்கள் இதயங்களில் ஆட்சி செய்ய இன்று காலை எங்கள் இதயங்களை உங்களுக்கு திறக்கிறோம் . ஆமென் 🙏!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அருமையை நமக்கு புரியச்செய்கிறது .!
கிருபை நற்செய்தி தேவாலயம்.