20-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் இலக்கின் உதவியாளர்களை தாமதமின்றி உங்களிடம் அனுப்புகிறது!
15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். லூக்கா 2:15-16 NKJV
மேற்கண்ட அந்த மேய்ப்பர்களின் எதிர்வினை மிகப் பிரமாதமாக இருந்தது.தேவதூதர் இயேசுவின் பிறப்பை அறிவித்த தருணத்தில்,அந்த மேய்ப்பர்கள் தேவதூதர் சொன்னது உண்மையா இல்லையா என்பதை சோதித்துப் பார்க்கச் செல்லவில்லை,மாறாக அவர்கள் அதை உண்மை என்று முடிவு செய்தனர்,மேலும் அவர்கள் ஒரு சாட்சியாக இருக்க விரும்பி புதிதாகப் பிறந்த ராஜாவின் பேரொளியை அனுபவிக்க நாடி சென்றனர்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திற்குப் புறப்பட்டபோது,அது உண்மையிலேயே அப்படி இருக்குமா என்று சோதிக்க 12 வேவுகாரர்களை அனுப்பினார்கள். அந்த 12 பேரில், காலேப் மற்றும் யோசுவா ஆகியோர் மட்டும் தேவனின் அறிக்கையை சரிபார்க்க விரும்பவில்லை, மாறாக அவர்கள் கர்த்தர் சொன்னதால் உண்மை என்று நம்பி உடனே தேசத்தை ஆக்கிரமிக்க விரும்பினர்.
இது தான் விசுவாசம் – ஏனென்றால், அவர்கள் கண் பார்க்காததை நம்பினர்!
அவர்களுடைய விசுவாசத்தினாலேயே,அப்படியே வயல்களில் இருந்த மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்க்க விரைந்தார்கள்.ஆம்! அவர்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு உடனடியாக செயல்பட்டனர்! அந்த விசுவாசம் தான் இன்று நம்மிடம் தேவைப்படுகிறது!
என் பிரியமானவர்களே,உங்கள் இருதயத்தையும் ஆன்மாவையும் நீங்கள் இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்கும் போது ,கிறிஸ்துவில் உள்ள தேவனின் பேரொளி உங்கள் மீது தங்கியிருக்கும்.அப்போது உங்கள் இலக்கிற்கு உதவும் உதவியாளராகள் விரைவாக உங்களை தேடி வருவார்கள்.நீங்கள் தகுதியானவரா அல்லது தகுதியுள்ளவர் இல்லையா என்பதைச் சரிபார்க்க அவரகள் வருவதில்லை. மாறாக உங்களுக்கு உதவவே வருகிறார்கள்
இன்றைய தினம், நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், இயேசுவின் பெயரில் உங்களுக்கு உதவ இதுபோன்ற தெய்வீக எதிர்கால இணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் நிதியாளர்கள் உங்களை நோக்கி விரைந்து வர தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன்.ஆமென் 🙏
நீங்கள் செய்ய வேண்டிய பிரகடனம்:”நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்! அல்லேலூயா !
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் இலக்கின் உதவியாளர்களை தாமதமின்றி உங்களிடம் அனுப்புகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.