12-07-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பூமியில் அவருடைய பெரு மகிழ்ச்சியைப் பெற்றுத்தருகிறது !
32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார் .லூக்கா 12:32 NKJV.
11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?(மத்தேயு 7:11) NKJV
பிதாவின் மகிழ்ச்சி,அவர் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதே. இதுவே அவர் சித்தமாயிருக்கிறது.அவரே நம்முடைய பரம பிதா ! நாம் நம் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்க அறிந்திருந்தால்,பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா நமக்கு நல்லதைக் கொடுப்பது மிக அதிக நிச்சயமாயிருக்கிறது . ஒரு உண்மையான தகப்பன் தன் குழந்தைகளுக்கு நல்லதையே நினைப்பான், செய்வான். அப்படியானால் , சர்வவல்லமையுள்ள தேவன் நம் பிதா எப்பொழுதும் நமக்குச் சிறந்ததாக இருக்கும் நல்லதையே நினைக்கிறார்,அதையே செய்கிறார் என்பது அதிக நிச்சயம் .
சங்கீதம் 8:4-ல் நம் பிதாவாகிய தேவன் நம்மைப் பற்றி நினைக்காமல் ஒரு கணம் கூட கடந்துபோவதில்லை
என்று எழுதுகிறார்.மனிதன் எவ்வளவு அற்பமானவன் என்பதைக் கருத்தில் கொண்டு நினைத்தால் ,
நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட பிதாவினுடைய அந்த பெரிய அன்பு எவ்வளவு அற்புதமாய் தோன்றுகிறது .
ஆம் என் பிரியமானவர்களே, நம்மைப் பற்றிய அவருடைய சித்தமான மற்றும் அற்புதமான எண்ணங்கள் நிஜத்தில் நிகழச் செய்வதற்கு, “உம் ராஜ்யம் வருவதாக , உமது சித்தம் நிறைவேரேட்டும் ..”என்று கேட்கும் நமது பிரார்த்தனை மட்டுமே அவரிடம் கொண்டு செல்கிறது.
ஜெபத்தில் வெளிப்படுத்தப்பட்ட அவருடனான நமது ஒத்துழைப்பு அவருடைய ஆழ்ந்த நோக்கங்களை மிகவும் அற்புதமாக வெளிப்படுத்துகிறது, அவருடைய அற்புதத்தை கண்டு உலகம் விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் நிற்கும்.
இன்று உங்கள் நாள்! அவருடைய இரக்கங்கள் உங்களைச் சூழ்ந்துகொள்ள அவருடைய தயவை ஈர்க்கும், அவருடைய நோக்கங்களை இயேசுவின் நாமத்தில் நிறைவேற்றும்!! ஆகவே இன்றே எழும்பி பிரகாசியுங்கள் !!! ஆமென் 🙏!
இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பூமியில் அவருடைய பெரு மகிழ்ச்சியைப் பெற்றுத்தருகிறது !
கிருபை நற்செய்தி தேவாலயம்