14-07-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பரிசுத்த ஆவியின் மூலம் பிதாவின் சித்தத்தை பெறச்செய்கிறது !
9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார் ; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (I கொரிந்தியர் 2:9-10) NKJV.
பரிசுத்த ஆவியானவர்,திரித்துவத்தில் ஒருவர்,தேவனின் மிகவும் நேசத்துக்குரிய நபர்.பிதா மற்றும் குமாரன் இருவரும் பரிசுத்த ஆவியை மிகவும் நேசிக்கிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் உணர்ச்சிகள்,சிந்தை மற்றும் சித்தம் கொண்ட ஒரு நபர். அவர் எல்லாம் வல்ல இறைவன் . அவர் ஒருவரே தேவனை நமக்கு உண்மையாகவும்,தெளிவாகவும் புரிய வைக்க முடியும். அவரால் மட்டுமே தேவனின் நோக்கங்களை நமக்கு வெளிப்படுத்த முடியும். அவர் தேவனின் சித்தம் மற்றும் அவரது இரகசியங்களை வெளிப்படுத்துபவர். பூமியில் தேவனின் செயல்திட்டத்தின் ஒவ்வொரு வெளிப்பாட்டின் பின்னணியிலும் அவர் இருக்கிறார்.
இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளுக்கு அறிவிக்க காபிரியேல் தூதர் வந்தபோது, அந்த பரிசுத்த ஆவியானவரால் தான் அற்புதப் பிறப்பு ஏற்படும் என்று அறிவித்தார்.
என் அன்பானவர்களே , இந்த பரிசுத்த ஆவியானவர் ஒரு அற்புதமான நண்பர். நீங்கள் அவருடன் ஒரு நண்பராகப் பேசலாம், நடக்கலாம். அது ஒரு அற்புதமான அனுபவமாகும்.அவரும் நீங்களும் ஒன்றாக மாறும்போது அதுவே,உங்கள் வாழ்க்கைப் பாணியாக மாறும். நீங்கள் இயற்கையாகவும் ஆன்மீகமாகவும் இருக்கிறீர்கள்.அது உண்மையிலேயே அற்புதமான அனுபவம்.பரிசுத்த ஆவியானவருடனான ஆழமான நெருக்கமானது ஒரு குறிப்பிட்ட நிலைக்கு அப்பால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, . ஆமென் 🙏
அன்புள்ள பிதாவே ,பரிசுத்த ஆவியானவர் எனக்கும் மிக அருமையான பரிசு.என் கற்பனைக்கு அப்பாற்பட்டு என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் பரிசுத்த ஆவியின் மூலமாக மட்டுமே என் வாழ்க்கையில் நிகழும். கர்த்தராகிய இயேசு,பரிசுத்த ஆவியானவர் என் வாழ்விலும் வசிப்பதற்காக தம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தைக் கொடுத்தார். இன்று, நான் அவரை என் வாழ்க்கையில் அழைக்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, இந்த நாளில் எனக்கு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுங்கள் மற்றும் பரிசுத்த ஆவியால் என் வாழ்க்கை முறையை வடிவமைக்க உதவுவீராக . ! ஆமென் 🙏!
இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பரிசுத்த ஆவியின் மூலம் பிதாவின் சித்தத்தை பெறச்செய்கிறது !
கிருபை நற்செய்தி தேவாலயம்.