21-07-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்கள் எப்படி நம் வாழ்வில் சாத்தியப்படும் என்பதை அறிவதாகும் !
34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
(லூக்கா 1:34-35)
தேவனுடைய சித்தத்தின் “எப்படி”என்ற மூன்றாவது பரிமாணத்தில் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நமக்கு உதவ முடியும். தேவனின் சித்தத்தை நிறைவேற்றும் ஆற்றல்மிக்க வழியைப் புரிந்து கொள்ளுமாறு அன்னை மரியாள் தேவதூதரிடம் கேட்டது போல் “எப்படி” என்ற கேள்வி ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளது.
முழு மனித இனத்தையும் மீட்பதற்காக அவருடைய ஒரே பேறான குமாரன் பூமியில் பிறக்க தேவனுடைய நேரம் வந்தது .ஆனால், மனிதகுல வரலாற்றில் இதுவரை நிகழாத கன்னிப் பிறப்பு “எப்படி” என்ற உண்மையான கேள்வியை எழுப்பியது.
ஆம் என் அன்பானவர்களே ,இன்றும் கூட,நம் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற நிதிக் கடன், நமது தொழில் சம்பந்தமான தகுதியின்மை, மலட்டுத்தன்மை, உடலில் நிரந்தரக் கோளாறு அல்லது நீண்ட நாள் பலவீனப்படுத்தும் சவால்களை நாம் எதிர்கொண்டிருக்கலாம். நீங்கள் எதிர்கொள்ளும் நிலை முற்றிலும் சாத்தியமற்றது என்று தோன்றினாலும்,தேவன் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதத்தை இன்று செய்வார். எப்படி? பரிசுத்த ஆவியானவரின் மூலமாகத்தான் !
அவர் மிகவும் அன்பான மற்றும் பிரியமான நண்பர்.அவர் உங்கள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முடியும். பரிசுத்த ஆவியுடன் முழுமையாய் ஒத்துழைப்பதே உங்களை விடுவிக்க உதவும் .
நம் வாழ்வில் சாத்தியமில்லாத காரியங்கள் “எப்படி” நிகழும் என்று யோசிக்கும் வேளையில்,பரிசுத்த ஆவியானவர் அதை இன்றே செய்வார், இப்போதே செய்யவார்,என்ற சத்தியம் உறுதிப்படுகிறது .
“ பரிசுத்த பிதாவே, உமது சித்தத்தைப் பற்றிய அறிவால் என்னை முழு ஞானத்திலும் ஆவிக்குரிய புரிதலிலும் நிரப்புங்கள். இயேசுவின் நாமத்தில், மனிதக் கண்களுக்கோ,காதுகளுக்கோ, மனித உணர்வுகளுக்கோ தெரியாத ஆவிக்குரிய உண்மைகளால் நான் அறிவொளி பெறுவதற்காக, என்னைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பி ஞானஸ்நானம் கொடுப்பீராக .
இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்கள் எப்படி நம் வாழ்வில் சாத்தியப்படும் என்பதை அறிவதாகும்.!
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாருக்குறீர்கள் ! ஆமென் 🙏!
கிருபை நற்செய்தி தேவாலயம்.