21-03-23
இன்றைய நாளுக்கான கிருபை !
உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய சிரமமில்லாத ஓய்வை அனுபவியுங்கள் !
7. கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
10. அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்துதேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
11. அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.
12. எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். (ஆதியாகமம் 12:7, 10-12) NKJV.
ஆதியிலிருந்தே,பிசாசின் சோதனையானது மனிதனை கடவுளின் இளைப்பாறுதலிலிருந்து நகர்த்துவதாகவே இருந்தது.
ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியான சுதந்திரம் கானான் தேசம். (v7). இது ஆபிரகாமுக்கு கடவுள் தேர்ந்தெடுத்த இளைப்பாறும் இடம். ஆனால், பிசாசின் சோதனையானது கடுமையான “பஞ்சத்தின்” மூலம் கடவுள் அவருக்குக் கொடுத்த இந்த ஓய்விலிருந்து ஆபிரகாமை நகர்த்துவதாகும்.
பஞ்சத்தின் காரணமாக ஆபிரகாம் கடவுள் காண்பித்த இளைப்பாறும் தேசத்தை விட்டு எகிப்துக்கு செல்ல விரும்பினார். தேவன் தனக்குக் காட்டிய தேசத்தைவிட எகிப்து பிரகாசமாக இருப்பதைக் கண்ட அவர் பஞ்ச தேசத்திலிருந்து வளமான நிலத்திற்குச் சென்றார். இருப்பினும், அவர் எகிப்துக்கு அருகில் வந்தபோது, அவரது இதயத்தில் பயம் தொடங்கியது.
இது கடவுளுடைய சித்தத்தை ஆவியில் உணராமல் இருப்பதின் விளைவு : கடவுள் கொடுத்த வாக்குத்தத்த நிலத்தை விட்டு வளமான நிலத்திற்கு அவர் உடல் ரீதியாக விலகிச் சென்றதால், ஆபிரகாம் ஆன்மீக ரீதியிலும் விசுவாசத்தை விட்டு விலகி பயத்திற்கு நகர்ந்தார்.
அவர் எகிப்திற்குள் நுழைந்தபோது ஆன்மீகச் சரிவு ஏற்பட்டது மட்டுமல்லாமல், கடவுள் சொன்ன இளைப்பாறுதல் தேசத்துக்கு திரும்பியபோது ஆகார் மூலம் ஒரு பெரிய பளுவை சுமப்பதாயிற்று .
என் பிரியமானவர்களே, இயேசுவே உங்கள நீதி ( JEHOVAH TSIDKENU )என்று நீங்கள் உண்மையிலேயே நம்பும் போது, அவர் உங்களைச் தவறான பாதைக்கு செல்லாதபடி காத்து ,தவறு செய்யாமலும் தடுக்கிறார்.தவறான முடிவுகளினால் வாழ்நாள் முழுவதும் கண்ணீரோடு சுமக்கும் தேவையில்லாத பாரத்திலிருந்து காத்து விடுவிக்கிறார்.
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியிருக்கிறீர்கள் ! ஆமென் 🙏
உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய சிரமமில்லாத ஓய்வை அனுபவியுங்கள்!
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்